Recipe Without Tomato: தக்காளி இன்றி பட்ஜெட்டில் ஒரு ரெசிப்பி செய்யலாம்-எப்படின்னு பாருங்க
Aug 06, 2023, 07:15 AM IST
அடுத்து அதில் கடலை மாவு, மாங்காய்த் தூள், காய்ந்த வெந்தயக் கீரை மற்றும் தயிர் சேர்த்து ஒரு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
தக்காளி விற்கும் விலைக்கு அதை வாங்கி சாம்பார் வைப்பது என்பது பல எளிய குடும்பங்களுக்கு முடியாத காரியம் ஆகும். இன்றைய நிலையில், 1 கிலோ தக்காளி ரூ.120க்கும், பெருநகரங்களில் ரூ.200 வரையும் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. பல வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய தாய்மார்கள் தொடங்கிவிட்டனர். அப்படி ஒரு டிஷ் தக்காளி இல்லாமல் என்ன செய்து சாப்பிடலாம் என பார்ப்போம்.
கத்திரிக்காய் சப்ஜிதான் அது. வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி இல்லாமல் ஒரு சப்ஜி செய்யலாம்.
இதை செய்ய தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்- 1 (ரவுண்ட்டாக நறுக்கி கொள்ளவும்)
கடலை மாவு- 3 டீஸ்பூன்
சோம்பு- ½ டீஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள்- ¼ டீஸ்பூன்
தனியாத் தூள்- 1 டீஸ்பூன்
சீரகத் தூள்- ¼ டீஸ்பூன்
காரப் பொடி- ½ டீஸ்பூன்
மாங்காய்த் தூள்- ½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- ¼ ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
சர்க்கரை- ½ டீஸ்பூன்
தயிர்- 8 டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை
கருப்பு உப்பு- ¼ டீஸ்பூன்
கொத்தமல்லி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வட்ட வடிவில் நறுக்கிய கத்திரிக்காவை வைத்து நன்றாக இரண்டு பக்கம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அடுத்து ஒரு கடாயில் கடலை மாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.
கடாயில் சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கருப்பு உப்பு, வெள்ளை உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
அடுத்து அதில் கடலை மாவு, மாங்காய்த் தூள், காய்ந்த வெந்தயக் கீரை மற்றும் தயிர் சேர்த்து ஒரு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
கொதித்த பின் அதில் கத்திரிக்காயை போடவும். அதை போட்ட பிறகு 3 நிமிடம் அதை கொதிக்க விடவும். சுவையான மற்றும் சத்தான சப்ஜி தயார் ஆகிவிடும். இதை சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் வைத்து பரிமாறலாம்.
தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நேரத்தில் இதுபோன்று நாம் ட்ரை பண்ணி பார்க்கலாம் அல்லவா!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்