தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலுக்கு அத்தியாவசிய தேவையாக திகழும் தாமிரம்! ஏன் தெரியுமா?

உடலுக்கு அத்தியாவசிய தேவையாக திகழும் தாமிரம்! ஏன் தெரியுமா?

Feb 24, 2022, 12:22 PM IST

google News
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்களில் மிக முக்கியமானவையாக தாமிரம் சத்துக்கள் உள்ளது. இது தேவைக்கு அதிகமாக கிடைத்தாலும் அல்லது அளவு குறைந்து கிடைத்தாலும் உடலின் ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்களில் மிக முக்கியமானவையாக தாமிரம் சத்துக்கள் உள்ளது. இது தேவைக்கு அதிகமாக கிடைத்தாலும் அல்லது அளவு குறைந்து கிடைத்தாலும் உடலின் ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்களில் மிக முக்கியமானவையாக தாமிரம் சத்துக்கள் உள்ளது. இது தேவைக்கு அதிகமாக கிடைத்தாலும் அல்லது அளவு குறைந்து கிடைத்தாலும் உடலின் ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.

கரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை புதிதாக கொண்டுவந்துள்ளது. அதில் மிக முக்கியமானதாக உணவு முறையில் மாற்றங்களையும், ஆரோக்கிய உணவுகள் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வதில் விழிப்புடன் இருக்க செய்கிறது.

ஆரோக்கியமான உணவுமுறையானது உடல் ஆற்றலை அதிகரிக்க செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக வைக்க உதவுகிறது. நமது உணவில் அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள், இயற்கையான சர்க்கரை, வைட்டமின், தாதுக்கள் போன்றவை இருக்க வேண்டும். சிலர் வைட்டமின்கள் அதிகம் சாப்பிடுவதில் கவனம் செலுத்துவார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் உடலுக்கு தேவையான தாதுக்களை எடுத்துக்கொள்ள மறந்துவிடுகிறார்கள். இதன் விளைவாக ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாதுக்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதிலும் குறிப்பாக தாமிரம் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.

உங்கள் உடலுக்கு ஏன் தாமிரம் சத்து தேவைப்படுகிறது?

மற்ற ஊட்டச்சத்துகளை போல் உயிர் வாழ்வதற்கு பிரதானமான தாதுக்களில் ஒன்றாக தாமிரம்  உள்ளது. உடலின் செயல்பாடுகளான ஆற்றல் உற்பத்தி, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, நோய் தடுப்பு அமைப்புக்கு ஆதரவளிப்பது, எலும்புகள், நரம்புகள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு இவற்றின் தேவை அத்தியாவசியமாக உள்ளது. 

தாமிரம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு மற்றொரு காரணமாக இது உடலிலுள்ள இரும்புச்சத்துக்களோடு இணைந்து செயல்பட்டு சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் திசுக்கள் உருவாவதற்கு உதவுகிறது.

தாமிரம் பற்றி நீங்கள் மேலும் புரிந்துகொள்வதென்றால், உடலில் சுவடு ஏற்படுத்தும் கூறுகளாக திகழும் இவை குறைந்த அளவு தேவைப்படுவதோடு, நிறைவான ஆரோக்கியத்தை பெற உதவுகிறது.

தாமிரம் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏன் முக்கியம்?

உடலில் உள்ள பல்வேறு நொதிகளுக்கு தேவைப்படும் தாதுக்களாக தாமிரம் உள்ளது. இது அவற்றின் செயல்பாடுகளிலும் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துகிறது. 

உதாரணமாக தாமிரம் உடலில் ஆற்றலை உருவாக்க உதவுகிறது. அதேபோல் மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்கு நரம்பியல் கடத்திகளை உருவாக்க உதவுகிறது.

இணைப்பு திசுக்கள் உருவாவதற்கும், சருமத்தில் மெலனின் உற்பத்தி பெருகுவதற்கும், உடலிலுள்ள இரும்புச் சத்துக்களை பயணிக்க வைக்கவும் தாமிரம் உதவுகிறது

இரும்புச் சத்துகளுடன் இணைந்து சிவப்பு ரத்த செல்களை உருவாக்கும் தாமிரம், ரத்த நாளங்கள், நரம்புகள், நோய் எதிர்ப்பு அமைப்பு, எலும்புகளை ஆகியவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தாமிரம் குறைபாடு இருப்பதன் காரணமாக ரத்த சோகை, ரத்த நாளங்களில் சிக்கல்கள், எலும்புப்புரை, நரம்பியல் வெளிப்பாடுகள் போன்ற சிக்கல்கள் உண்டாகிறது. தாமிரம் சத்தானது குறைந்த அளவே தேவைப்பட்டாலும், உடல் இயக்க செயல்பாடுகளில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. 

தாமிரம் குறைப்பாடு அல்லது அதீத அளவு ஒருவரது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றை சரியான அளவில் உட்கொள்வது உடலுக்கு நன்மை தரும்.

உங்களது உடல் தன்னிச்சையாகவே தாமிரம் சத்துக்களை உருவாக்கி கொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவுகளிலிருந்து இதனை பெறலாம். பலவகையான பழங்கள், காய்கறிகள், இறைச்சிகளில் தாமிர சத்துக்கள் நிறைந்துள்ளன.

தாமிரம் சத்து நிறைந்துள்ள உணவுகள்

 

சிப்பி வகைகள்

கடல் சார்ந்த உணவுகளில் தாமிரத்தின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. சிப்பிகள், ஒரு வகையான செல்மீன்களில் (மட்டிமீன்கள்) இவை நிறைந்துள்ளன. 100 கிராம் சிப்பிக்களில் 7.6 மில்லி கிராம் தாமிரம் சத்துக்கள் உள்ளன. இவை உங்களது அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் சிப்பிக்களில் வைட்டமின் டி, துத்தநாகம், மங்கனீசு சத்துக்களும் நிரம்பியுள்ளன.

அடர் பச்சை நிற காய்கறிகள், இலைகள்

பசலை கீரைகள், பச்சை முட்டைக்கோஸ் போன்றவற்றில் ஊட்டச்சத்துகள் நிறைந்து இருப்பதோடு, குறைவான கலோரிகளோடும், தாமிரம் சத்துக்கள் அதிகம் நிறைந்தும் காணப்படுகிறது. 

இதுமட்டுமில்லாமல் நார்ச்சத்து, வைட்டமின் கே, கால்சீயம், மக்னீசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்திருப்பதோடு, ரத்த செல்களை உருவாக்கவும், ரத்த சோகையை தடுக்கவும் செய்கிறது. மிக முக்கியமாக எலும்புகளை வலுப்பெற செய்கிறது.

உலர் பழங்கள்

உலர் பழங்கள் தோற்றத்தில் மிகச் சிறிதாக இருந்தாலும் வைட்டமின் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக திகழ்கிறது. பல்வேறு விதமான உடல் ரீதியான செயல்பாடுக்கு பயன்படும் இவை அதிகப்படியான நார்ச்சத்து, புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக உள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளில் அதிகளவிலான தாமிரம் சத்துக்கள் உள்ளன.

விதைகள்

எள்ளு விதைகள், பிளாக்ஸ் விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை உண்ணக்கூடியதாக இருப்பதோடு, அதிகளவு தாமிரம் சத்துக்களை கொண்டதாக உள்ளது. சைவம் மட்டும் உண்பவர்கள் கொட்டை வகைகள் மற்றும் விதைகளை அதிகமாக உட்கொள்ளலாம்.

டார்க் சாக்லேட்

சாக்லேட்டை பொறுத்தவரை ஊட்டச்சத்து அளவானது அதிகமாகவே உள்ளது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கப்படுவதோடு, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி