Fish Fry : கிழங்கான் மீன் வறுவல்! மூலநோயை குணமாக்கும்! ஒரு வாரம் எடுக்க வேண்டும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது!
Feb 19, 2024, 08:00 AM IST
Fish Fry : கிழங்கான் மீன் வறுவல்! கண் பார்வையை கூர்மையாக்கும்! ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது!
தேவையான பொருட்கள்
கிழங்கான் மீன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு – அரை பழத்தின் சாறு
சோடா
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை -
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லித்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து இவற்றுடன் சோடாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
கலந்து வைத்த மசாலா கலவையை கிழங்கா மீனுடன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து ஊறவைத்த மீனை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
அருமையான கிழங்கா மீன் வறுவல் தயார்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.
மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.
மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்ட மீன்களில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.
உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கிழங்கான் மீன்களில் கருப்பு கிழங்கான், வெள்ளை கிழங்கான் என இரண்டு வகை மீன்கள் உள்ளன. கிழங்கான் மீனை சாப்பிடுவதால் மூல நோய் பிரச்னைகள் குணமாகவும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கான் மீனை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்