தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ellu Podi: ருசியான எள்ளு பொடி.. இதுஒன்னே போதும் அத்தனை சத்தானது!

Ellu Podi: ருசியான எள்ளு பொடி.. இதுஒன்னே போதும் அத்தனை சத்தானது!

Sep 29, 2023, 02:34 PM IST

google News
பொடியுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறலாம்.
பொடியுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறலாம்.

பொடியுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறலாம்.

பொதுவாக இட்லி தோசை சாப்பிடும்போது அந்த இடத்தில் இட்லி பொடி இருந்தால் ஒரு தனி ஆனந்தம்தான். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இட்லி பொடி அந்த பொடியில் பூண்டு பொடி, தேங்காய் பொடி என எத்தனை வகைகள் இருந்தாலும் எள்ளு இருந்தால் தனி ருசிதான்

தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு -2 கப்

கடலை பருப்பு -1கப்

எள்

அரிசி

மிளகாய் வத்தல்

பூண்டு

பெருங்காயம்

கறிவேப்பிலை

உப்பு

புளி

தேங்காய் எண்ணெய்

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் உளுந்தம் பருப்பை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும் தீயை சிம்மில் வைத்து வறுத்தால் உளுந்தம் பருப்பு கருகாமல் இருக்கும். இதையடுத்து அரைக்கப் கடலை பருப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டும். இதையடுத்து மிளகாய் வத்தலை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் ஒரு கப் எள் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். எள் பொரிய ஆரம்பிக்கும்போது அதை பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போது கால்கப் அரிசியைபொன்னிறமாக வரும் வரை வறுத்து அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து அதில் பெருங்காயம் சேர்க்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் 10 பல் பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் 2 கைபிடி கறிவேப்பிலையை லோசாக வறுக்க வறுத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக்காள்ளலாம்.(புளி சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் விட்டு விடலாம்.

வறுத்த பொருட்கள் நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதிகமான அளவில் பொருட்களை எடுத்தவர்கள் ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளலாம். இந்த இட்லிப்பொடியை பொதுவாக கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த பொடியுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சுடச்சுட இட்லி தோசைக்கு பரிமாறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி