தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Fall Prevention: தலைமுடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை பேனி காக்கும் தாவர உணவுகள் பற்றி தெரியுமா?

Hair Fall Prevention: தலைமுடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை பேனி காக்கும் தாவர உணவுகள் பற்றி தெரியுமா?

Apr 11, 2024, 05:55 PM IST

google News
சில தாவர வகை உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் தலைமுடி உதிர்வு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். தலைமுடியை பேனி பாதுகாக்கும் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சில தாவர வகை உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் தலைமுடி உதிர்வு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். தலைமுடியை பேனி பாதுகாக்கும் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சில தாவர வகை உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் தலைமுடி உதிர்வு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். தலைமுடியை பேனி பாதுகாக்கும் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொண்ட பிறகு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் கவலைப்படுகிறீர்களா? என்னதான் அதற்கான மருந்துகள், மாத்திரைகள், மூலிகை எண்ணெய் வகைகளை தலைமுடியில் தேய்த்தாலும், மோசமான அளவில் ஊட்டச்சத்துகள் இருப்பது தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே நீங்கள் ஊட்டச்சத்துகள் மிகுந்த சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் தலை முடி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்.

தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் 

தலைமுடி உதிர்வுக்கு பொதுவான காரணமாக ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா என்ற பரம்பரை நிலை உள்ளது. வயதான பின்பு இவை ஏற்படுகிறது. இதேபோல் தலைமுடி உதிர்வு, அடர்த்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் தலை முடி பராமரிப்பு என்ற பெயரில் அவற்றுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் கொடுப்பது, உச்சந்தலை பகுதியில் ஏற்படும் தொற்று, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மருந்துகளை பயன்படுத்துவதால் நிகழும் எதிர்வினை, ரசாயண சிகிச்சை போன்றவற்றாலும் இவ்வாறு நிகழ்கிறது.

எனவே தலைமுடி உதிர்வு காரணமாக தூக்கத்தை இழப்பவர்கள், அதிகமாக சிந்திப்பதையும், பயத்தையும் விட்டு விலக வேண்டும். உங்கள் தலைமுடி உதிர்வுக்கு கீழ்காணும் காரணங்களில் ஏதாவது ஒன்றாக இருப்பதற்காகவும் வாய்ப்பு உள்ளது. அதை ஆராய்ந்து தலைமுடிகளில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

தலை முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை பேனி பாதுகாக்கவும் உணவுகள் பற்றி நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

கொட்டை வகைகளைப் போல் விதைகளிலும் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில் ஒமேகா 3 மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த விதைகளை ஸ்மூத்தீஸ், சாலட், தானியங்கள், தயிர் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நமது அடிப்படையான உணவு வகைகள் பக்கம் மீண்டும் திரும்புவதன் மூலம் சீரான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். பருப்பு வகைகள் புரதம் சார்ந்த சத்துகளுக்கு சிறந்த ஆதாராமாக உள்ளது. இவை தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கீரை வகைகளில் அதிகளவிலான ஃபோலேட், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பாலக் பன்னீர், பரோட்டாக்களில் கீரையை ஸ்டஃப் செய்து சாப்பிடுவது போன்று பல வகைகளில் உங்கள் உணவுகளில் கீரைகளை சேர்க்கலாம்.

நெல்லிக்காயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உணவில் இரும்புச்சத்துக்களை உறிஞ்சி தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை