தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Coffee: மிஸ்பண்ணிடாதீங்க.. பீல் பண்ணுவீங்க.. தினம் ஒரு காபி குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

Benefits of Coffee: மிஸ்பண்ணிடாதீங்க.. பீல் பண்ணுவீங்க.. தினம் ஒரு காபி குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

Jan 11, 2024, 10:30 AM IST

google News
ஹெல்த்லைன் இணையதளத்தின்படி, காபி குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. 30 வெவ்வேறு ஆய்வுகள் தினமும் காபி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து 6 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. (Freepik)
ஹெல்த்லைன் இணையதளத்தின்படி, காபி குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. 30 வெவ்வேறு ஆய்வுகள் தினமும் காபி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து 6 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

ஹெல்த்லைன் இணையதளத்தின்படி, காபி குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. 30 வெவ்வேறு ஆய்வுகள் தினமும் காபி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து 6 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

காபி சாப்பிட்டால் இதய நோய் நீங்கும்! மேலும் இந்த பானத்தின் நன்மைகள் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பது மக்களின் அன்றாட வழக்கமாகவே மாறி விட்டது. அதிலும் பலருக்கு காபிதான் முதல் சாய்ஸ்.  இன்னும் சொல்லப்போனால் பலருக்கு காலையில் காபி குடிக்க வில்லை என்றால் அன்றைய நாளே உற்சாகமற்றதாக ஆகிவிடுகிறது.  

அந்த அளவிற்கு மக்களுடன் ஒன்றாக கலந்து உள்ளது காபி. அதிலும் இந்த குளிருக்கு காலையில் எழுந்த உடன் காபி என்பது கண்டிப்பான தேவையாக உள்ளது. பலர் காபி குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளை விக்கும்  என்றும் கருதுகின்றனர். ஆனால் அளவாக காபி எடுத்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க

குளிர்கால நாளில் ஒரு கப் காபியின் சுவை வித்தியாசமானது. ஆனால் ஒரு கப் சூடான காபியின் தரம் குறையாது. காபி குடித்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

ஹெல்த்லைன் இணையதளத்தின்படி, காபி குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. 30 வெவ்வேறு ஆய்வுகள் தினமும் காபி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து 6 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க காபி மிகவும் உதவுகிறது. மூளையின் ஆற்றலை அதிகரிக்க இந்த பானம் மிகவும் உதவுகிறது. இந்த பானத்தை தினமும் குடிப்பதால் மூளை வளம் பெறும்.

இந்த பானம் உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் காபி குடிக்க வேண்டும். தினமும் காபி குடிப்பதால் உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

கல்லீரல் பிரச்சனைகளை நீக்க காபி உதவுகிறது. காபி குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் எளிதில் நீங்கும். உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு கப் காபி சாப்பிடலாம்.

ஒரு துளி காபி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பானத்தை குடிப்பதால் இதயம் புத்துணர்ச்சியுடன் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இந்த பானம் இதய நோய் வராமல் இருக்க உதவுகிறது.

இப்படி காபி குடிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும் அதிகமாக காபி எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதே போல் அதிகமாக பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதும் நல்லது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி