தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips: உங்கள் குழந்தை பள்ளியில் மனச்சோர்வடைகிறதா.. தவறாக நடந்து கொள்கிறதா?

Parenting Tips: உங்கள் குழந்தை பள்ளியில் மனச்சோர்வடைகிறதா.. தவறாக நடந்து கொள்கிறதா?

Jan 05, 2024, 11:57 AM IST

google News
அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்வது முதல் ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது வரை, பள்ளியில் குழந்தை தவறாக நடந்து கொள்ளும்போது செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே. (Unsplash)
அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்வது முதல் ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது வரை, பள்ளியில் குழந்தை தவறாக நடந்து கொள்ளும்போது செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே.

அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்வது முதல் ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது வரை, பள்ளியில் குழந்தை தவறாக நடந்து கொள்ளும்போது செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே.

குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கலாம். நம் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் சிறந்ததை வழங்க விரும்பும் அதே வேளையில், வாழ்க்கையை சுமூகமாக வழிநடத்துவதற்கான மதிப்புகள் மற்றும் திறன்களையும் அவர்களுக்கு கற்பிக்க விரும்புகிறோம். நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கும்போது, அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வேறு ஒரு உலகத்தை பார்க்கிறார்கள். அவர்கள் புதிய நண்பர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அறிவை சேகரிக்கிறார்கள். 

இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் பள்ளியில் மனச்சோர்வு அல்லது தவறாக நடக்கத் தொடங்குகிறார்கள். "எங்கள் குழந்தைகள் பள்ளியில் தவறாக நடந்து கொள்ளும்போது அது மிகவும் கடினமான இருக்கும் . உங்கள் பிள்ளை மோசமாக நடந்து கொள்ள விரும்பவில்லை அல்லது நீங்களோ அல்லது அவர்களின் ஆசிரியர்களோ எதிர்மறையான வெளிச்சத்தில் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதோ ஒன்று தடையாக இருக்கக்கூடும், எனவே முதல் படி உங்கள் குழந்தையின் கண்ணோட்டத்தில் பள்ளி எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்களால் முடிந்ததை (தொடர்ச்சியான உரையாடல்கள் மற்றும் தரமான நேரம் மூலம்) முயற்சிப்பதில் கவனம் செலுத்துவதாகும்" என்று உளவியலாளர் ஜாஸ்மின் மெக்காய் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் என்ற முறையில், நம் குழந்தைகள் பள்ளியில் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிவது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களின் நடத்தை முறைகளுக்கான காரணங்களைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் அனுபவத்தில் கவனம் செலுத்துங்கள்

சில நேரங்களில் ஒரு நல்ல கேட்பவராக இருப்பதும், நம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதும் பள்ளியில் அவர்களுக்கு இருக்கும் அனுபவங்களைப் புரிந்துகொள்ள உதவும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன், அதற்கான காரணங்களை ஆழமாக ஆராய வேண்டும்.

ஆசிரியருடன் சந்திப்புகளை ஏற்படுத்தவும்

பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை ஆசிரியர் வழங்க முடியும். ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் குழந்தைக்காக வாதிடுவது நிலைமையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.

தொழில்முறை உதவியை நாடுங்கள்:

பள்ளியில் வழக்கமான மந்தநிலை அல்லது சில நடத்தை முறைகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிற சிக்கல்களின் அறிகுறிகளாக இருக்கலாம். நிலைமையைத் தீர்க்க நிபுணர்களின் உதவியை நாடுவது முக்கியம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி