தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்டில் பால்கனியில்தான் செடிகள் வளர்க்க இடம் உள்ளதா? துளசியை எந்த திசையில் வைக்கலாம் பாருங்கள்!

வீட்டில் பால்கனியில்தான் செடிகள் வளர்க்க இடம் உள்ளதா? துளசியை எந்த திசையில் வைக்கலாம் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 11, 2024, 07:00 AM IST

google News
வீட்டில் பால்கனியில்தான் செடிகள் வளர்க்க இடம் உள்ளதா? எனில் துளசியை எந்த திசையில் வைத்து வளர்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் பால்கனியில்தான் செடிகள் வளர்க்க இடம் உள்ளதா? எனில் துளசியை எந்த திசையில் வைத்து வளர்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டில் பால்கனியில்தான் செடிகள் வளர்க்க இடம் உள்ளதா? எனில் துளசியை எந்த திசையில் வைத்து வளர்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

துளசிச் செடியை வளர்க்க உங்கள் பால்கனியில் மட்டும்தான் இடம் உள்ளதா? எனில், அதை எப்படி அங்கு வைத்து வளர்க்கவேண்டும் என்று பாருங்கள். துளசிச்செடி இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பரவலாக வளர்க்கப்படும் தாவரம் ஆகும். இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. மத ரீதியான நம்பிக்கைகளும் உள்ளன. நீங்களும் உங்கள் வீட்டில துளசிச் செடியை வளர்க்க விரும்பினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். இங்கு நீங்கள் எந்த திசையில் வளர்க்கவேண்டும் என்று பாருங்கள். அதை வளர்க்கும் வழிகள். அதை அறுவடை செய்வது எப்படி மற்றும் அதற்கு மேலும் என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

துளசியின் முக்கியத்துவம்

துளசி, இந்தியாவில் புனிதமான செடிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்துக்கள் உலகம் முழுவதும் துளசிச் செடிகளை வளர்க்கிறார்கள். அவர்கள் வீடுகளின் பால்கனிகள், முற்றங்கள், மொட்டை மாடிகள் மற்றும் தோட்டங்களில் துளசிச் செடிகளை வளர்க்கிறார்கள். நீங்கள் வீட்டில் துளசிச் செடியை வளர்க்கும்போது, அது உங்கள் வீட்டுக்கு அமைதி, செல்வம், பாதுகாப்பைக் கொண்டு வருகிறது என்று இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் அறிவியல்படி துளசிச் செடிகளை நீங்கள் முகரும்போது அது சுவாச மண்டலத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்து அதை காக்கிறது. மேலும் சளியை குணப்படுத்தும் அருமருந்தாக துளசி உள்ளது. உங்கள் வீட்டில் 14 துளசிச் செடிகளை வளர்க்கவேண்டும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் வீட்டில் உள்ள காற்று சுத்தமாகிறது. வீட்டில் உள்ளவர்கள் தேவையான சுத்தமான ஆக்ஸிஜனும் கிடைத்துவிடுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

துளசியின் மருத்துவ குணங்கள்

இயற்கையில் துளசி செடிக்கு மருத்துவ குணங்கள் உள்ளது. துளசிச் செடி தொண்டை தொற்றுகள், இருமல், சளி என உபாதைகளை சரிசெய்கிறது. இது சுவாச மண்டலத்துக்கு நல்லது.

சரியான திசை

வாஸ்து சாஸ்திரத்தின்படி பண்டைய கால நம்பிக்கைகளின்படி, உங்கள் வீட்டில் துளசிச்செடியை வளர்க்க சரியான திசையாக கிழக்கு உள்ளது. கிழக்கில்தான் சூரியன் உதிக்கும், அந்த திசையில் துளசிச் செடி இருக்கும்போது, அது உங்களுக்கு எண்ணற்ற நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறது. துளசிச் செடி வளர்வதற்கு சூரிய ஒளியும் கிடைக்கிறது. எனவே கிழக்குதான் துளசிச் செடி வளர ஏற்ற திசை.

மற்றொரு திசை

உங்களால் வீட்டில் கிழக்கு திசையில் துளசிச் செடியை வளர்க்க முடியவில்லையென்றால், அடுத்து சிறந்த திசையாக வடகிழக்கு உள்ளது.

வேறு எங்கு வளர்க்கலாம்?

உங்களால் துளசிச் செடியை கிழக்கம் அல்லது வடகிழக்கில் வளர்க்க முடியவில்லையென்றால், நீங்கள் வடதிசையில் துளசிச் செடியை வளர்க்கலாம். ஆனால் இதை கடைசி தேர்வாக வைத்துக்கொள்ளுங்கள்.

முற்றிலும் தவிர்க்கவேண்டிய திசை

நீங்கள் துளசிச் செடிகளை தெற்கு திசையில் வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தெற்கு திசை எமனுக்கான வாசல் ஆகும். மரணங்களின் கடவுள் இந்து மதத்தில் எமன் என்று அழைக்கப்டுகிறார். எனவே அந்த திசையை தவிர்க்கவேண்டும்.

துளசியை பறிக்கலாமா?

துளசி என்பது புனிதமான செடி என்பதால், அதை பறிக்கக்கூடாது என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அவற்றை தாராளமாகப் பறிக்கலாம். ஆனால் சூரியன் மறைந்த பின்னர் துளசியை பறிக்கக்கூடாது. ஏகாதசி உள்ளிட்ட புனிதமான நாட்களிலும் துளசியை பறிக்கக்கூடாது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பறிக்கலாம்.

எப்போது பறிக்கவேண்டும்?

துளசியை செடியில் இருந்து பறிக்க உகந்த நேரம், அதிகாலை ஆகும். பூஜை செய்துவிட்டு, உங்கள் கைகளை சுத்தம் செய்துகொண்டு, அவற்றை நீங்கள் பறிக்கலாம்.

துளசி நன்றாக வளர என்ன செய்யவேண்டும்?

நீங்கள் தாராளமான சூரிய ஒளியின் அடியில் வைத்து துளசிச் செடியை வளர்க்கவேண்டும். அவற்றை அவ்வப்போது வெட்டி வளர்க்கவேண்டும். தினமும் ஒருமுறை தண்ணீர் கட்டாயம் விடவேண்டும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை