Diabetes Remedy : ரத்தத்தில் இயற்கையாக இன்சுலின் சுரப்பை உருவாக்கும் மூலிகை எது என்று தெரியுமா?
Mar 17, 2024, 10:44 AM IST
Benefits of Guava Leaves Tea : இத்தனை நன்மைகள் நிறைந்த கொய்யா இலைகளை உங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடல் இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறும்.
இன்சுலின் ஊசி தொடர்ச்சியாக செலுத்திக்கொண்டே வந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கு வராது. ரத்தத்தில் இயற்கையாகவே இன்சுலீன் சுரப்பை உருவாக்கக்கூடியது கொய்ய இலைகள், இந்த இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்து பருகினால் உங்கள் ரத்தச்சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
கொய்ய இலை தேநீர் செய்ய தேவையான பொருட்கள்
கொய்ய இலைகள் – 6
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் கொய்ய இலைகள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்க விடவேண்டும்.
பின்னர் அதை வடிகட்டி, அரை ஸ்பூன் தேன் கலந்து பருகவேண்டும். சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் தேனின் அளவை குறைத்தும், சர்க்கரை இல்லாதவர்கள் அதிக தேனைக்கூட சேர்த்துக்கொள்ளலாம்.
கொய்யா இலை தேநீரின் பயன்கள்
செரிமானத்துக்கு உதவுகிறது
கொய்யா இலைகளில் ஆன்டி-பாக்டீரியல் உட்பொருட்கள் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மலத்தை இலக்கி மலச்சிக்கலை போக்குகிறது. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது.
ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகள் அல்லது நோய் வரும் ஆபத்து உள்ளவர்கள் கொய்யா இலைகள் மிகவும் நல்லது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்துகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஊக்கமளிக்கிறது
கொய்ய இலைகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆகிஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்து உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதன் மூலம், நோய்கள் மற்றும் தொற்றுகள் எதிர்த்து போராட உதவுகிறது. உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
கொய்யா இலைகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கு ஃப்ரீ ராடிக்கல்களை சமப்படுத்துகிறது. இது செல்களின் சேதத்தை குறைக்கிறது. புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுக்கிறது. இதை வழக்கமாக எடுத்துக்கொண்டால்,அது சில புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது
கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, கொய்யா இலைகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
கண்பார்வை குறைபாட்டை சரிசெய்கிறது
கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள், கண் பார்வைக்கு நல்லது. இந்த இலைகளை சாப்பிடுவது கண் ஆரோக்கியத்தை கூராக்கும். கண் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
கொய்யா இலையில் மனஅழுத்தத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதனால் பதற்றம் குறைந்து, ஒட்டுமொத்த மனநலனும் மேம்படுகிறது. அவை உங்களின் அமைதிக்கு வழிவகுக்கிறது. மனஅழுத்தம் ஏற்படும்போது இது உங்களை ரிலாக்ஸ் ஆக்குறிது.
உடல் எடை இழப்புக்கு சிறந்தது
கொய்யா இலைகள் உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது கலோரிகளை குறைக்க உதவுகிறது. எடைக்குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் இதை சேர்ப்பதால் நன்மை கிடைக்கும்.
மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது
கொய்யா இலைகள் மாதவிடாய் வலிகளை குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது. இதில் உள்ள குணங்கள் வலிகளை போக்கும். மாதவிடாயை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது
கொய்யா இலைகளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைய உள்ளது. இது சரும நோய்களை மற்றும் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இது உங்கள் சருமத்தை இருக்கமாக்கச் செய்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த இலைகள் தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த கொய்யா இலைகளை உங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடல் இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறும்.
டாபிக்ஸ்