Covid Vaccine : கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வு எப்படி இருக்க வேண்டும்? – விளக்கும் மருத்துவர்!
Nov 26, 2023, 07:15 AM IST
Covid Vaccine : கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என மருத்துவர் விளக்குகிறார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மிகச் சமீபத்தில், ‘கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்களிடம் அதிகரித்து வரும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என்றும், கொரோனா நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், பரம்பரையிலேயே திடீர் மரணம் நிகழ்ந்துள்ளதும், பிற வாழ்சூழலுக்கும் (ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், பழக்கமில்லாத கடும் உடல் உழைப்பை மேற்கொண்டதற்கும்) தொடர்புள்ளது என தெரிவித்தது.
கர்ப்பப்பை வாய் தடுப்பூசி இந்தியாவிற்கு புழக்கத்தில் வர 2008ம் ஆண்டே, அனுமதி பெற்ற நிலையில், 2007ம் ஆண்டே ICMR எந்த வித அறநெறிகளையும் பின்பற்றாமல், HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்திய PATH நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு அதை புழக்கத்தில் கொண்டுவர முயற்சி எடுத்தது எந்த விதத்திலும் சரியானதல்ல என அறிக்கை எண் 72 சுட்டிக்காட்டியதோடு, PATH நிறுவனத்திற்கு ஆதாரங்களின்றி ICMR உதவியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் அறிக்கை 72ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆக, ICMR க்கு தடுப்பூசி விசயத்தில் வணிக நலனே முக்கியம் என்பது தெளிவு. கொரோனா தடுப்பூசி, இளைஞர்கள் மத்தியில் திடீர் மரணம் தொடர்பான ஆய்வில் குறைப்பாடுகள் உள்ளன.
29,171 இறப்புகளில் 729 இறப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதில் ஒருதலைபட்சம் (Selection Bias) இருக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Study, Control நபர்களை தேர்ந்தெடுத்த விசயங்களில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளதை ஆய்வு ஏற்றுக்கொள்கிறது.
புள்ளிவிவர சேகரிப்பில் தவறுகள் நிறைய நிகழ வாய்ப்புள்ளது என்பதையும் ஆய்வு ஏற்றுக்கொள்கிறது.
கொரோனா தடுப்பூசி அரிதாக மரணங்களை எற்படுத்தியுள்ளது என்பதை அறிவியல் உலகம் மற்றும் ICMR ஏற்றுக்கொள்கிறது.
பல இறப்புகளில் பிரேத பரிசோதனை அறிக்கை இல்லை. செவி வழி செய்திகளில் இறப்பை நேரில் காணாத சூழல் இருக்கும்போது தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.
இறப்பு குறித்தான நம்பும்படியான முழுமையான, தெளிவான தகவல்கள் இல்லை. புள்ளிவிவரங்களின் உறுதித்தன்மையை சுயேச்சையாக ஆராய வழியில்லை.
கொரோனா தடுப்பூசி பின்விளைவுகள் பதியப்படுவது இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை.
இறந்தபின் மருத்துவர் சான்றளிக்கும் நடைமுறை இந்தியாவில் 20 சதவீதம் மட்டுமே உள்ளது.
இப்படி, குறைப்பாடுகள் நிறைந்த ஆய்வை செழுமைப்படுத்த வேண்டியுள்ளது.
இல்லையேல், வறுமை நிலை, கொரோனா தடுப்பூசி பின்விளைவுகளை அறிவியல் ரீதியாக ஆராய்வதில் சிக்கல் ஏற்பட்டு, உண்மை நிலை வெளிச்சத்திற்கு வராது என்பதை மக்கள் உணர வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்