தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Corn Benefits : ஆண்களின் புராஸ்டேட் பிரச்னைக்கு தீர்வு! மறதிக்கு மருந்து! மக்காச்சோள மகிமைகள்! தினம் ஒரு தானியம் அறிவோம்

Corn Benefits : ஆண்களின் புராஸ்டேட் பிரச்னைக்கு தீர்வு! மறதிக்கு மருந்து! மக்காச்சோள மகிமைகள்! தினம் ஒரு தானியம் அறிவோம்

Priyadarshini R HT Tamil

Jan 31, 2024, 07:00 AM IST

google News
Corn Benefits : ஆண்களின் புராஸ்டேட் பிரச்னைக்கு தீர்வு! மறதிக்கு மருந்து! மக்காச்சோள மகிமைகள்! தினம் ஒரு தானியம் அறிவோம்
Corn Benefits : ஆண்களின் புராஸ்டேட் பிரச்னைக்கு தீர்வு! மறதிக்கு மருந்து! மக்காச்சோள மகிமைகள்! தினம் ஒரு தானியம் அறிவோம்

Corn Benefits : ஆண்களின் புராஸ்டேட் பிரச்னைக்கு தீர்வு! மறதிக்கு மருந்து! மக்காச்சோள மகிமைகள்! தினம் ஒரு தானியம் அறிவோம்

உலகில் முக்கியமான உணவு தானியங்களுள் ஒன்றாக மக்காச்சோளம் உள்ளது. இது புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவர விதைகள். இது அமெரிக்காவை சேர்ந்தது என்றாலும் உலகம் முழுவதிலும் எண்ணிலடங்கா வகைகளில் வளர்கிறது.

பாப்கார்ன் மற்றும் ஸ்வீட் கார்ன் ஆகியவை மிகவும் பிரபலமான வகைகள். மக்கா சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவில் உட்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் அதிகளவில் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. பொதுவான மஞ்சள் நிற மக்காச்சோளமே இருந்தாலும், இது சிவப்பு, ஆரஞ்சு, பர்பிள், ப்ளூ, வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களிலும் உள்ளது.

100 கிராம் மக்காச்சோளத்தில் 96 கலோரிகள் உள்ளது. தண்ணீர் 73 சதவீதம், புரதச்சத்து 3.4 கிராம், கார்போஹைட்ரேட் 21 கிராம், சர்க்கரை 4.5 கிராம், நார்ச்சத்துக்கள் 2.4 கிராம் மற்றும் கொழுப்பு 1.5 கிராம் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 200 வகை மக்காச்சோளம் உள்ளது. 4 முக்கிய வகைகள் உள்ளன.

ஸ்வீட் கார்ன்

இது மஞ்சள் மற்றும் வெள்ளை அல்லது இரண்டு நிறங்களும் கலந்து வருகிறது. இனிப்பு சுவை நிறைந்தது.

இந்திய மக்காச்சோளம்

இது ஸ்வீட் கார்னைவிட மிகக்கடினமாக இருக்கும். இது சிவப்பு, வெள்ளை, ப்ளூ, கருப்பு, பொன்னிறம் ஆகிய வண்ணங்களில் வருகிறது. இந்த வகை மக்காச்சோளம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வளர்கிறது.

பாப்கார்ன்

இதை நீங்கள் மைக்ரோவேவ் அவன் அல்லது கடாயில் சேர்த்து பொரித்தால், அது வெடித்து பாப்கார்ன்கள் கிடைக்கும்.

டென்ட் கார்ன்

இது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதன் மேல்புறத்தில் சிறிய குழி இருக்கும். இது விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

கண் ஆரோக்கியம்

மக்கா சோளத்தில் உள்ள லியூட்டின் மற்றும் ஷெஆக்சன்தின் ஆகியவை வைட்டமின் ஏ போன்ற கரோட்டினாய்ட்கள், இது மஞ்சள் மற்றும் பசுமை நிற காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது. இவை கண்களில் கண் புரை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் செரிக்கவைக்க முடியாத பகுதிகளை உடல் வெளியேற்றிவிடுகிறது. இது செரிக்காவிட்டாலும் இதில் பல நன்மைகள் உள்ளன.

அது ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மற்றும் குடல் இயக்கத்தை முறைப்படுத்துவது என்பதாகும். பாப்கார்ன் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பாப்கார்ன் அதிகம் சாப்பிடும்போது ஆண்களுக்கு அது குடல் நுண்ணுயிர் அழற்சி நோய் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

புராஸ்டேட்டிஸ் சிகிச்சை

இதில் குயிர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புராஸ்டேட்டிஸ் எனப்படும் ஆண்மை சுரப்பி வீக்கத்தை குணப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுக்கு இந்தப்பிரச்னை பரவலாக ஏற்படுகிறது. அதற்கு இந்த மக்காச்சோளம் உதவுகிறது.

மறதியை குறைக்கிறது

குயிர்செட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ஞாபக மறதி மற்றும் நினைவிழப்பு போன்ற அல்சைமர் மற்றும் டிமென்ஷியா அகிய நோய்களை குணப்படுத்துகிறது. இந்த குயிர்செட்டின் நரம்பு செல்களை பாதுகாப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நரம்பு வீக்கம் அல்லது அழற்சியை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மறதி நோய் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள புரதச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

இது மூளையில் நச்சுவாய்ந்த தொற்றுகள் ஏற்படுவதற்கு எதிராக எதிர்ப்புத்திறனை உருவாக்குகிறது. இந்த தொற்றுகள் அல்சைமர் நோய்க்கு காரணமாகின்றன.

மக்காச்சோளத்தை எடுத்துக்கொள்ளும்போது கவனம் தேவை

இதை சரியாக மென்று சாப்பிடாவிட்டால் இதன் தோல் குடலில் சிக்கி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தை கொடுத்தாலும், அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவாக எடுத்துக்கொள்வது நன்மையளிக்கிறது.

இதை ஊறவைத்து, வேகவைத்து சாப்பிடும்போதுதான் அது உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்ச உதவும். இதில் எளிதாக பூஞ்சை ஏற்படும் என்பதால் அதில் இருந்து மைக்கோடாக்சின்ஸ் என்ற நச்சுப்பொருள் உருவாகும்.

இந்த நச்சுடன் மாக்காச்சோளத்தை சாப்பிட்டால் அது புற்றுநோய், கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் பிரச்னைகளை ஏற்படுத்தும். அது உங்களின் நோய் எதிர்ப்பை பாதிக்கும். சிலருக்கு மக்காச்சோளம் அலர்ஜி ஏற்படுத்தும். அவர்கள் அதை தவிர்க்க வேண்டும். எந்த தானியமும் அளவோடு எடுத்துக்கொள்ளும்போதுதான் ஆற்றல் கொடுக்கிறது. அது மக்காச்சோளத்துக்கும் பொருந்தும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி