Constipation Home Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கலை விரட்டியடிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு குறிப்பு போதும்!
Sep 03, 2024, 09:57 AM IST
Constipation Home Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கலை விரட்டியடிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு குறிப்பு போதும். என்னவென்று தெரிந்து பயன்பெறுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மலச்சிக்கல் பிரச்னைகள்
இன்று பலர் மலச்சிக்கல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு வாரத்தில் ஒருமுறை, ஒருநாள் விட்டு ஒருநாள், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என மலச்சிக்கல் பிரச்னைகள் உள்ளது.
சிலருக்கு மலம் கழிந்தாலும் அது கெட்டியாகவே போகும். இதனாலும் அவர்களுக்கு வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும். உடல் உஷ்ணம், இந்த மலச்சிக்கல் பிரச்னைக்கு ஒரு காரணமாகும். மேலும் பல காரணங்கள் உள்ளன. இரவு நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள்.
தண்ணீர் சரியாக பருகாதவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அதிகம் துரித உணவுகள், சோடா பானங்களும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பெருங்குடல் நீரை உறிஞ்சி, தேவையற்ற கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மலச்சிக்கல் ஏற்படும். காலை, மாலை இருவேளை மலம் கழிக்கவேண்டும்.
நன்றாக மலம் கழிக்கவில்லையென்றால் அது உடலுக்கு கேடு. கழிவுகள் உடலில் தேங்கவில்லையென்றால், நமக்கு நோய்களே வராது. இதுகுறித்து வெளியில் பேசுவதற்கு தயங்கக்கூடாது. மலத்தை வெளியேற்றும் வழிகளை நீங்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதற்கு என்ன செய்யவேண்டும்.
தேவையான பொருட்கள்
நிலஆவாரை – 60 கிராம்
சுக்கு – 15 கிராம்
பிஞ்சு கடுக்காய் – 15 கிராம்
அதிமதுரம் – 15 கிராம்
நன்னாரி வேர் – 15 கிராம்
செய்முறை
இவையனைத்தையும் நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இவையனைத்தையும் இடித்து பொடி செய்து, இறவு உறங்கச் செல்லும் முன் சூடான நீரில் பருகிவிட்டு படுத்துக்கொள்ளவேண்டும்.
அப்படி செய்யும்போது, காலையில் எழுந்தவுடன் மலம் கழிந்துவிடும். இதை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் வாழ்வில் மலச்சிக்கல் என்பதே கிடையாது. மனச்சிக்கலின்றி உறக்கச் செல்லவேண்டும். மலச்சிக்கலின்றி எழுந்திருக்கவேண்டும்.
இதுவே ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையாகும். அன்றாடம் மலம் வெளியேற்றப்பட்டுவிட்டால், உங்கள் உடலுக்கு அது மிகவும் நல்லது. மலம் தங்கினாலே பிரச்னைதான். எனவே இந்தக்குறிப்பை பின்பற்றி மலச்சிக்கலை விரட்டுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்