Vallarai Keerai Soup : வயிறு உப்புசம், மலச்சிக்கல், செரிமான கோளாறுகளைப்போக்கும் வல்லாரைக்கீரை சூப்!
Vallarai Keerai Soup : வயிறு உப்புசம், மலச்சிக்கல், செரிமான கோளாறுகளைப்போக்கும் வல்லாரைக்கீரை சூப், ஈசியா செஞ்சு ஆசைய பருகலாம்.
வல்லாரைக் கீரையுடன் தண்ணீர், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, ஆறவைத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அப்படியே அரைத்து தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இளஞ்சூடாக்க வேண்டும். அதை எடுத்து அப்படியே உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பருகலாம். இது உடனடியாக மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளை குணப்படுத்தும். உங்களுக்கு காரம் ஏற்றுக்கொள்ளாது என்றால், மிளகாய் தூளை குறைக்கலாம் அல்லது சுத்தமாகவே தவிர்க்கலாம். வல்லாரைக் கீரை எளிதாக சந்தைகளில் கிடைக்கும் ஒரு கீரைதான். உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக்கீரை எனக் கூறுவார்கள். ஆனால் வல்லாரை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டு வரும். அதனால்தான் வல்லாரை உண்டோருடன் மல்லாடாதே, அதாவது மல்லுக்கட்டாதே என்பார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலை அந்தக்கீரை தருகிறது. அதில் உள்ள நற்குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியம்
வல்லாரைக்கீரையில் உள்ள கால்சியத்தை உங்கள் உடலில் உள்ள எலும்புகள் உறிஞ்சிக்கொள்கிறது. அது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் உங்கள் எலும்பின் அன்றாட செயல்பாடுகள் அதிகரிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களின் உடல் செல்கள் மற்றும் திசுக்களின் மினரல் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது.
சிறுநீரக தொற்ற பிரச்னைகளை எதிர்த்து போராடுகிறது
வல்லாரைக் கீரையில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வயிறு வீக்கத்தை குறைக்கிறது. இது ஆண், பெண் இருவரிடத்திலும் பொதுவான ஒன்று. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் திறன்கள், ஃப்ரி ராடிக்கல்கள் மறறும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஆரோக்கிய செல்கள் உடல் உறுப்புகளில் தோன்றுவதற்கு காரணமாகிறது. உடலில் கழிவுகள் சேர்வதையும் தடுக்கிறது.
அனீமியாவுக்கு தீர்வாகிறது
மனித உடலில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடல் இரும்புச்சத்தை தேவையான அளவு உறிஞ்சுவதை உறுதி செய்கிறது. உடலில் இரும்புச்சத்துக்கள் குறைந்தால், அனீமியா ஏற்படுகிறது. இதனால் ரத்த சிவப்பணுக்கள் குறைக்கிறது. உடல் அனைத்து செல்கள் மறறும் திசுக்களுக்கு ரத்தத்தை கடத்துவது குறைகிறது. எனவே சாப்பாட்டுடன் வல்லாரைக்கீரை எடுக்கும்போது உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்றன. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
வல்லாரைக் கீரையில் உள்ள மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வல்லாரைக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் வல்லாரையில், 15 கலோரிகள் 3.2 கிராம் கார்போஹைட்ரேட்கள், 1 கிராம் நார்ச்சத்துக்கள், 0.04. கிராம் கொழுப்பு, 2.76 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. வைட்டமின்கள் பி1 (தியாமின்) 3 சதவீதம், ரிபோஃப்ளாவின் (பி2) 2 சதவீதம், நியாசின் (பி3) 1 சதவீதம், வைட்டமின் பி6 3 சதவீதம், வைட்டமின் சி 73 சதவீதம் உள்ளது.
இரும்புச்சத்துக்கள் 1 சதவீதம், மெக்னீசியம் 2 சதவீதம், மாங்கனீஸ் 1 சதவீதம், பாஸ்பரஸ் 5 சதவீதம், பொட்டாசியம் 5 சதவீதம், சிங்க் 1 சதவீதம் மற்றும் சோடியம் சுத்தமாக இல்லை.
இதில் உள்ள பொட்டாசியச்சத்து ஒரு நாளின் தேவையை பூர்த்தி செய்யும். இதில் உள்ள பாஸ்பரஸ், காப்பர், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் சிங்க் சத்துக்கள் உங்கள் உடலுக்கு நன்மை தருபவை. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. சாப்போனின்கள் அல்லது டிரிட்டர்பினாய்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள், பாலிஃபினால்கள், டேனின்கள் இவை நரம்புகளுக்கு நல்லது.
வல்லாரைக்கீரையின் ஆரோக்கிய நன்மைகள்
மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது.
இதய நோய் வராமல் தடுக்கிறது.
தசை வலியைப் போக்குகிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்