தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cinnamon Tea : இந்த ஒரு டீயை தினமும் குடிங்க; உற்சாகத்தில் துள்ளி குதிப்பீங்க! ஆரோக்கியமும் நிறைந்தது!

Cinnamon Tea : இந்த ஒரு டீயை தினமும் குடிங்க; உற்சாகத்தில் துள்ளி குதிப்பீங்க! ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

Jan 14, 2024, 11:00 AM IST

google News
Cinnamon Tea : இந்த ஒரு டீயை தினமும் குடிங்க; உற்சாகத்தில் துள்ளி குதிப்பீங்க! ஆரோக்கியமும் நிறைந்தது!
Cinnamon Tea : இந்த ஒரு டீயை தினமும் குடிங்க; உற்சாகத்தில் துள்ளி குதிப்பீங்க! ஆரோக்கியமும் நிறைந்தது!

Cinnamon Tea : இந்த ஒரு டீயை தினமும் குடிங்க; உற்சாகத்தில் துள்ளி குதிப்பீங்க! ஆரோக்கியமும் நிறைந்தது!

தேவையான பொருட்கள்

பட்டைப்பொடி – ஒன்றரை ஸ்பூன்

கிராம்பு – 2

எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

கொதி வந்தவுடன், அதில் பட்டைப்பொடியை சேர்க்க வேண்டும். இதை மிதமான தீயில் வைத்து கலந்துவிட்டு, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.

அடுப்பை குறைத்துவிட்டு, கிராம்பு சேர்த்து, ஒரு கப் சூடான தண்ணீர் சேர்த்து மூடிவைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

அடுப்பை அணைத்துவிட்டு, கொதித்த டீயை எடுத்து வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பரிமாறவேண்டும்.

இதில் கிராம்பையும் இடித்து பொடி செய்து சேர்த்துக்கொள்ளலாம். இந்த தேநீர் உங்களுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பை வழங்குவதுடன் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

பட்டையின் நன்மைகள்

உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை பாதுகாக்கிறது. மேலும் இவை அழற்சி ஏற்படாமல் தடுக்கிறது. இது இயற்கையான ஃபுட் பிரசர்வேட்டிவாக செயல்படுகிறது.

உங்கள் உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. திசுக்களை சரிசெய்கிறது.

இதய நோய்கள் வரும் ஆபத்தை தடுக்கிறது. நாளொன்றுக்கு ஒன்றரை கிராம் பட்டைப்பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது கொழுப்பு மற்றும் ரத்தச்சர்க்கரை அளவை குறைக்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து 8 வாரம் எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் குறையும். இதய நோயை குறைக்க உதவும்.

இன்சுலினை அதிகரிக்கும்

இன்சுலின், உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவும் ஹார்மோன். ரத்தச்சர்க்கரையை ரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைத்து, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது

நரம்பியல் கோளாறுகள் நரம்பு செல்களின் இயக்கம் குறைவதால் ஏற்படுகிறது. அல்சைமர் மற்றும் பார்க்கின்சன்ஸ் பிரதானமான நரம்பியல் கோளாறுகள். பட்டை, டாய் என்ற புரதம் மூளையில் சுரக்கவிடாமல் தடுத்து, அல்சைமர் நோய் வராமல் பாதுகாக்கிறது. நியூரான்களை பாதுகாக்க உதவுகிறது. நியூரோடிரான்ஸ்மிட்டர்களை இயல்பாக்குகிறது. உடலில் இயக்கத்தை அதிகரிக்கிறது.

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது

புற்றுநோயை தடுத்து, அதன் சிகிச்சைக்கு பட்டை உதவுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ரத்த நாளங்களில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது புற்றுநோய் செல்களை அழிக்கிறது. கருப்பை புற்றுநோயை பட்டை வளரவிடாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பாக்டீரியா மற்றும் பூஞ்ஜை தொற்றை தடுக்கிறது

பல்வேறு தொற்றுகளுக்கும் எதிராக செயல்படுகிறது. பட்டை எண்ணெய் சுவாச பாதையில் தொற்று ஏற்படுத்தும் சில வகை பூஞ்ஜைகளை அழிக்கிறது. குறிப்பிட்ட சில பாக்டீரியாக்கள் வளர்வதையும் தடுக்கிறது. பற்களை பாதுகாத்து, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது

சில வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஹெச்ஐவி வைரஸ்க்கு எதிராக செயல்படுகிறது. பட்டை இன்ஃபுளுயன்சா, டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் மற்ற வைரஸ்களுக்கும் எதிராகவும் செயல்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி