Honeymoon Places: ஹனிமூன் செல்ல திட்டமிடுகிறீர்களா?.. இந்தியாவின் சிறந்த இடங்கள் என்னென்ன இருக்கு பாருங்களேன்!
Sep 25, 2024, 06:17 PM IST
Honeymoon Places: திருமணம் முடிந்த கையோடு சரியான இடங்களை தேர்வு செய்தால் மட்டுமே ஹனிமூன் பயணம் இனிதாக அமையும். எனவே உங்கள் ஹனிமூன் பயணத்தை மிகுந்த கவனத்துடன் திட்டமிடுங்கள். நம் நாட்டில் சிறந்த ஹனிமூன் இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிறந்த இடங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Honeymoon Places: திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வது கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒருவரின் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமையும். ஹனிமூன் என்பது வாழக்கையில் காலம் கடந்தும் நினைவில் நிற்கும் அனுபவம். சரியான இடங்களை தேர்வு செய்தால் மட்டுமே ஹனிமூன் பயணம் இனிதாக அமையும். எனவே உங்கள் ஹனிமூன் பயணத்தை மிகுந்த கவனத்துடன் திட்டமிடுங்கள். நம் நாட்டில் சிறந்த ஹனிமூன் இடங்கள் பல உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான தம்பதிகளை ஈர்க்கும் சில ஹனிமூன் இடங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
குமரகம்
கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தின் வேம்பநாடு ஏரியில் உள்ள குட்டித் தீவுகளின் ஒரு தொகுதி தான் குமரகம். பசுமையான கடற்கரைகளால் சூழப்பட்ட குமரகம் கேரள மாநிலத்தில் இயற்கையின் மத்தியில் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட சிறந்த இடமாகும். இங்குள்ள படகு ஹவுஸ்போட்டில் உப்பங்கழிக்கு செல்லும் போது, படகில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் சத்தம் கேட்கும். உங்கள் துணையுடன் சில தனிமையான தருணங்களை செலவிடலாம். அழகிய இயற்கைக்காட்சியை கண்டு மகிழுங்கள்.
கேங்டாக்
சிக்கிமின் தலைநகரான கேங்டாக் இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். நீங்கள் ஒரு காதல் விடுமுறையைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், கேங்க்டாக் ஒரு சிறந்த இடமாகும். இங்கு இயற்கை அழகு பற்றி சொல்லவே வேண்டாம். இடையில் நீங்கள் நிறைய காதல் தருணங்களை செலவிடலாம்.
டார்ஜிலிங்
மேற்கு வங்க மாநிலத்தில் சிவாலிக் மலையின் மீது அமைந்திருக்கிறது டார்ஜிலிங். இது இந்தியாவின் மிகவும் காதல் நிறைந்த இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் அதன் சொந்த உணர்வைக் கொண்டுள்ளது. இங்குள்ள பொம்மை ரயில் பயணத்தை மறந்துவிடாதீர்கள் . சுற்றியுள்ள மலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் இயற்கைக்காட்சிகள் அற்புதமானவை. உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த இடமாகும்.
ஸ்ரீ நகர்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்திருக்கும் ஸ்ரீநகர் , தால் ஏரியின் மிக அழகான இயற்கைக் காட்சிகளுக்கும், படகு தங்குமிடத்திற்கும் பிரபலமானது. உங்கள் துணையுடன் உச்ச பயணத்தை அனுபவிக்கவும். நீங்கள் முகலாய தோட்டங்களைப் பார்க்கலாம். உள்ளூர் சந்தைகளை ஆராயுங்கள். ஸ்ரீநகர் அதன் அற்புதமான அழகு மற்றும் அமைதியான சூழ்நிலையுடன் இந்தியாவில் ஒரு ஆடம்பர தேனிலவு இடமாகும்.
கோவா
தனிமையையும், அமைதியையும் தாண்டி தங்கள் திருமண பந்தத்தை கொண்டாட்டத்துடன் துவங்க வேண்டும் என நினைக்கும் ஜோடிகளுக்கு கோவா ஒரு சிறந்த இடமாக இருக்கும். பழமையான கட்டிடங்கள், பார்ட்டி நடக்கும் கடற்கரைகள் என பல ரசனையான அனுபவங்களை நீங்கள் இந்த ஹனிமூன் பயணத்தில் பெற முடியும். அஞ்சுனா, வகேடோர், சபோரா போன்றவை கோவாவில் இருக்கும் முக்கிய கடற்கரைகள் ஆகும்.
ஊட்டி
தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் அமைந்துள்ள பகுதி தான் ஊட்டி. இயற்கை காட்சிகள், இதமான குளிர் போன்றவற்றை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த இடம் ஊட்டி. இங்குள்ள உயிரியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஏரி, தொட்டபெட்டா சிகரம் என அனைத்தும் மனதை சொக்க வைக்கும்.
டாபிக்ஸ்