Fatty Liver Disease: மது அருந்தாமல் இருந்தாலும் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படலாம்..எப்படி தெரியுமா? - விபரம் இதோ..!
Fatty Liver Disease: கொழுப்பு கல்லீரல் நோய் சில நுட்பமான அறிகுறிகளைக் காட்டுகிறது. அவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Fatty Liver Disease: மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். உண்மையில், கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்தாமல் கூட ஏற்படலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது தற்போது பலரிடம் காணப்படும் பிரச்சனை. இது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் தொடங்குகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் சில நுட்பமான அறிகுறிகளைக் காட்டுகிறது. அவற்றைக் கண்டறிவதன் மூலம் நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
கல்லீரல் நோயின் அறிகுறி
செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் சரியாக செயல்படாதபோது, கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைகிறது. அப்போது அந்த கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேரும். வயிற்றைச் சுற்றி கொழுப்புச் சேர்வது கல்லீரல் நோயின் அறிகுறியாகும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் திடீரென எடை அதிகரிப்பு அல்லது அதிக எடை அதிகரிப்பு கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பின் காரணமாக எடை கூடுகிறது. வயிற்றைச் சுற்றி கொழுப்பு திடீரென அதிகரிப்பது உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.