தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Carrot Lemon Rice: காலை உணவுக்கு ஹெல்தியான கேரட் எலுமிச்சை சாதம்! எப்படி செய்யணும் தெரியுமா?

Carrot Lemon Rice: காலை உணவுக்கு ஹெல்தியான கேரட் எலுமிச்சை சாதம்! எப்படி செய்யணும் தெரியுமா?

Jan 16, 2024, 10:08 AM IST

google News
நீங்கள் எப்போதும் ஒரே காலை உணவை சாப்பிட்டால் ஒரு விதமான அலுப்பு தட்டி விடும். இதனால் இப்படி புதிதான ஒரு காரட் லெமன் சாதத்தை ட்ரை பண்ணுங்க. ((unsplash))
நீங்கள் எப்போதும் ஒரே காலை உணவை சாப்பிட்டால் ஒரு விதமான அலுப்பு தட்டி விடும். இதனால் இப்படி புதிதான ஒரு காரட் லெமன் சாதத்தை ட்ரை பண்ணுங்க.

நீங்கள் எப்போதும் ஒரே காலை உணவை சாப்பிட்டால் ஒரு விதமான அலுப்பு தட்டி விடும். இதனால் இப்படி புதிதான ஒரு காரட் லெமன் சாதத்தை ட்ரை பண்ணுங்க.

நாம் எப்போது காலையில் ஆரோக்கியமான காலை உணவை உண்ண வேண்டும். அப்போதுதான் நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல.. நீங்கள் எப்போதும் ஒரே காலை உணவை சாப்பிட்டால் ஒரு விதமான அலுப்பு தட்டி விடும். இதனால் இப்படி புதிதான ஒரு காரட் லெமன் சாதத்தை ட்ரை பண்ணுங்க.

ஆரோக்கியமான கேரட் எலுமிச்சை சாதம் எப்படி செய்யலாம் என பார்கலாம். இதை செய்வது மிகவும் எளிது. மதிய லஞ்ச் பாக்ஸ்க்கு ஈசியாக செய்து கொடுக்கலாம். இது அதிக நேரம் எடுக்காது.

பொதுவாக லெமன் ரைஸ் செய்வது எப்படி என்று கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். அதில் கேரட்டை துருவலை சுவையான எலுமிச்சை கேரட் சாதம் ரெடி. பின்வருமாறு எளிமையாகச் செய்யுங்கள்.

கேரட் எலுமிச்சை சாதத்திற்கு தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்

எலுமிச்சை சாறு – 1/4 கப்

பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)

கேரட் – 1 (துருவியது),

மிளகாய் – 2

கொத்தமல்லி – சிறிதளவு

ஆலிவ் எண்ணெய் – 2

டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 1/ 2 டீ ஸ்பூன்

உப்பு - ருசிக்கேற்ப,

எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1 டீ ஸ்பூன்

சீரகம் அரை டீ ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 1/2 டீஸ்பூன்,

கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் பொடி - 1 சிட்டிகை,

வறுத்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன்,

முந்திரி - 1 டீஸ்பூன்

செய்முறை

1. முதலில் பாசுமதி அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு 1 கப் தண்ணீர், சிட்டிகை உப்பு மற்றும் சிறிது நெய் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

2. விசில் வந்ததும் குக்கரை திறந்து அரிசியை ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.

3. பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

4. இதையடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

5. பிறகு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

6. இப்போது அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.

7. பிறகு பொரித்த பொருட்களை அரிசியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கேரட் லெமன் சாதம் ரெடி.

இந்த கேரட் லெமன் சாதம் மிகவும் ஆரோக்கியமானது. சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கேரட்டில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குழந்தைகளின் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கேரட் தீர்வு தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி