Brinjal Rice : வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம்! அப்படி ஒரு ருசியில் உங்கள் உள்ளம் கவரும்!
Nov 22, 2023, 11:00 AM IST
Brinjal Rice : வாங்கி பாத், கத்தரிக்காய் சாதம், அப்படி ஒரு ருசியில் உங்கள் உள்ளம் கவரும்.
கர்நாடகாவின் புகழ்பெற்ற சுவையான உணவு வாங்கிபாத், கத்தரிக்காய் சாதம். இதன் சுவையும், மணமும் ஒருமுறை சாப்பிட்டால் உங்கள் நாவைவிட்டு நீங்காது. இதில் வெங்காயம், தக்காளி சேர்க்க தேவையில்லை. இது லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்தது.
பொடி செய்ய தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வர கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கிராம்பு – 3
பட்டை – 1
வர மிளகாய் – 10
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
(டெசிகேடட் கோக்கனட் சேர்த்துக்கொள்ளுங்கள்)
சாதம் செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கத்தரிக்காய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
நெய் – ஒரு ஸ்பூன்
வடித்த சாதம் – 2 கப்
புளி கரைசல் – கால் கப்
(எலுமிச்சை அளவு புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வரமிளகாய், தேங்காய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகி வாசம் வரும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடைசியாக வர மிளகாயையும் தேங்காயையும் சேர்க்க வேண்டும். தேங்காய் சேர்க்கும்போது, டெசிக்கேடட் கோக்கனட் சேர்த்துக்கொள்வது நல்லது. அதை சேர்த்து செய்யும்போது இந்தப்பொடியை 15 நாட்கள் வரை பத்திரமாக வைத்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் வறுத்த பின்னர், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலையை தாளிக்க வேண்டும். பின்னர் பெருங்காயத்தூள், கடலை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். புளிக்கரைசல் சேர்த்து அது நன்றாக கொதித்து, வற்றும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பொடியில் தேவையான அளவு சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சாதம் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால் போதும். கத்தரிக்காய் சாதம், வாங்கி பாத் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல் என ஏதேனும் ஒன்று கூட போதும் அல்லது எதாவது காய்கறிகள் பொரியல் அல்லது கூட்டு செய்துகொள்ளலாம்.
வித்யாசமான சுவையில் இருக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இது லன்ச் பாக்ஸ்க்கு சிறந்தது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்