தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : ‘சொந்தங்கள், பந்தங்கள், சுற்றங்கள், நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி?’

Birthday Wishes : ‘சொந்தங்கள், பந்தங்கள், சுற்றங்கள், நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி?’

Priyadarshini R HT Tamil

Sep 23, 2024, 07:00 AM IST

google News
Birthday Wishes : சொந்தங்கள், பந்தங்கள், சுற்றங்கள், நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Birthday Wishes : சொந்தங்கள், பந்தங்கள், சுற்றங்கள், நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Birthday Wishes : சொந்தங்கள், பந்தங்கள், சுற்றங்கள், நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால், உங்களுக்கு அன்பானவர்களின் பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றவேண்டுமா? அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள, வாழ்த்துக்களை நீங்கள் பகிரும்போது, அது அவர்களின் பிறந்த நாளை மிகவும் இனிமையானதாக்கும். இனிமையான வாழ்த்துக்கள், மனதை தொடும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், இதயத்தை வருடும் வாழ்த்துக்கள் என இங்கு சில வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தி, அவர்களின் நாளை மேலும் சிறப்பாக மாற்றுங்கள். உங்கள் சொந்தங்களின், நட்புக்களின் முக்கியமான நாட்கள் உங்கள் வாழ்த்துக்கள் இல்லாமல் எப்படி? நாங்கள் உங்களுக்கு இங்கு பிரத்யேக வாழ்த்துக்களை தொகுத்துள்ளோம். அவற்றை பயன்படுத்தி அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

குடும்பம்போன்ற உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவது எப்படி?

நீ எனக்கு சிறந்த மகனைப்போன்றவர். நான் உன்னுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன். உனக்கு இன்றைய நாள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் உனக்கு மிகவும் சிறந்த அத்தையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். உனது சிறந்த நாளை நான் கெடுக்க விரும்பவில்லை. இன்று நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பது குறித்து சிந்தி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இந்த உலகிலே சிறந்த மருமகன் நீ. நான் உன்னுடன் ஊர் சுற்றுவதை விரும்புகிறேன். உனது நாள் சிறப்பான ஒரு நாளாகட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உனக்கு உனது பெற்றோர் வாங்கித் தர மறுப்பதை வாங்கித்தரும் அத்தையாக இருக்க விரும்புகிறேன். எனவே உனக்கு என்ன வேண்டும் என்று கூறு. நான் இன்று அதை உனக்கு பரிசளிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எனது குடும்பங்கள் எப்போது ஒன்று கூடினாலும் அதில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று உனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நான் உனது பிறந்த நாளில் எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். நான் அங்கு இருப்பதுபோல் இந்த நாளைக் கொண்டாடு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நீ எனக்கு கசின் மட்டும் கிடையாது. நண்பரும் ஆவாய். எனவே நான் அதற்கு உனக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நீ எனக்கு முதலில் முக்கியம் என்பதை நான் எப்போதும் ஒற்றுக்கொள்கிறேன். நாம் இருவரும் சிறந்த ஜோடி, உனக்கு ஒரு சிறந்த நாள் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை