Chess Olympiad 2024: குகேஷ் மற்றும் அர்ஜுன் சிறப்பான ஆட்டம்..10 வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கம்
45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் டீன் ஏஜ் வீரர்கள் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 10வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது இந்தியா அணி.

Chess Olympiad 2024: குகேஷ் மற்றும் அர்ஜுன் சிறப்பான ஆட்டம்..10 வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கம்
45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 10 முதல் 23 வரை இந்த போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா ஆண்கள் அணி தனது 10வது சுற்று போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது.
இந்திய செஸ் விளையாட்டில் இதுவொரு பொன்னான நேரமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு உலகப் பட்டத்தை கிட்டத்தட்ட தன் வசம் ஆக்க இருக்கின்றனர் இந்திய இளம் வீரர்களான குகேஷ், அர்ஜுன் எரிகேசி. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஒரு சுற்று போட்டிகள் மீதமமிருக்க வரலாற்று சிறப்பு மிக்க தங்க பதக்கத்துக்கு இந்தியாவை அழைத்து சென்றதில் முக்கி பங்கு ஆற்றியுள்ளனர்.