தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Palak: உடலுக்கு நல் ஆரோக்கியமும் ஊட்டமும் தரும் பசலைக்கீரை!

Benefits of Palak: உடலுக்கு நல் ஆரோக்கியமும் ஊட்டமும் தரும் பசலைக்கீரை!

I Jayachandran HT Tamil

Apr 06, 2023, 05:01 PM IST

google News
உடலுக்கு நல் ஆரோக்கியமும் ஊட்டும் தரும் பசலைக்கீரை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்
உடலுக்கு நல் ஆரோக்கியமும் ஊட்டும் தரும் பசலைக்கீரை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்

உடலுக்கு நல் ஆரோக்கியமும் ஊட்டும் தரும் பசலைக்கீரை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்

பசலைக்கீரை அல்லது பாலக் கீரை என்று அழைக்கப்படும் இந்தக் கீரையில் நிறைந்த வைட்டமின்களும், புரதமும், தாதுக்களும் அடங்கியுள்ளன. வாரத்தில் மூன்று முறையாவது இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால் நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதை பருப்புடன் கடைந்து கொடுத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென ஏறுவது தடுக்கப்படும்.

பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடெண்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.

பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நியூட்டிரியன்ட்ஸ் இருக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

இந்த கீரையில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

பசலைக்கீரையில் உள்ள லுடின், கண்புரை மற்றும் இதர கண் பிரச்னைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு

மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சத்துக்களாகும்.

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரி செய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்..

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி