Benefits Of Kaikuthal Arisi:மூளை திறனுக்கு உகந்த கைக்குத்தல் அரிசியின் நன்மைகள்
Apr 12, 2023, 09:10 PM IST
மூளை வளர்ச்சிக்கு உகந்த கைக்குத்தல் அரிசியின் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
ரைஸ் மில்களில் தீட்டப்படும் அரிசிகளைத் தான் இப்போது நகரங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் வாங்கி சாப்பிடுகின்றனர். இயந்திரங்களில் தீட்டப்படும் நெல்லில் இருந்து நார்ச்சத்து நிறைந்த உமி நீக்கப்படுவதால் அரிசியில் நார்ச்சத்து இல்லாமல் போய்விடுகிறது. இந்த அரிசி எளிதில் செரிமானம் ஆகிவிடும் என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீக்கிரம் அதிகரித்துவிடும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல.
இன்றைக்கும் கிராமங்களில் மக்கள் கைக்குத்தல் அரிசிதான் சாப்பிடுகின்றனர். இதனால்தான் அவர்கள் உடல் திடமாகக் காணப்படுகிறது.
கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இது தான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின்.
அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது. இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.
தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவ தால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.
கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்குமென்று சாப்பிட வேண்டும். இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது.வயிறு நிறைந்து விடும். இதனால் தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர்.
கைக்குத்தல் அரிசியில் இருக்கும் உமியிலும் நல்ல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. அதன் தவிடு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மாடுகளுக்கும் நல்ல தீவனமாக இருக்கின்றது.
அந்தக்காலத்தில் எல்லாம் தவிட்டு ரொட்டி என்று விற்பார்கள். அது கைக்குத்தல் அரிசியில் இருந்து கிடைக்கும் தவிடில் இருந்து தயாரிக்கப்பட்டவை. சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. அந்தளவுக்கு சத்து நிறைந்தது.
டாபிக்ஸ்