Benefits of Groundnuts : தினம் ஒரு தானியம்! இதய வலிகளை போக்கும் அருமருந்து ‘கடலை’ போடுவதால் அல்ல; சாப்பிடுவதால்!
Mar 16, 2024, 06:43 PM IST
Benefits of Groundnuts : ஆரோக்கியமான அளவு கொலோஜன் சருமத்தில் நெகிழ்தன்மையை பாதுகாக்கிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடியளவு கடலையை சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது.
கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.
ஆரோக்கியமான சருமம்
ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நமது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான அளவு கொலோஜன் சருமத்தில் நெகிழ்தன்மையை பாதுகாக்கிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடியளவு கடலையை சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
இதய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது
இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.
ரெஸ்வெராட்ரால், என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் வறுத்த கடலையில் உள்ளது. அது இதய கோளாறுகளை எதிர்த்து போராடுகிறது. அது செல்களில் சேதத்தை குறைக்கிறது. இதய நோயாளிகளுக்கு நற்பலன்களை கொடுக்கிறது.
ரெஸ்வெராட்ராலில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சிக்கு எதிரான தன்மை, ரத்தக்கட்டுக்களை தடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை உடலில் வீக்கத்தை குறைக்கவும், ஆஞ்ஜியோடென்சின் ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தையும் தடுக்கிறது.
மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
கடலை மூளைக்கு மிகவும் நல்லது. இதில் பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு, மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு, வைட்டமின் பி3 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையை பலப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் நினைவாற்றல் பெருகச் செய்கிறது.
அல்சைமரஸ் போன்ற வயோதிகத்தால் ஏற்படும் நினைவிழப்பை குறைக்க நியாசின் உதவுகிறது. அதிகம் கடலை எடுத்துக்கொள்பவர்களுக்கு அந்நோய் தடுக்கப்படுகிறது.
மூளை, கடலையில் உள்ள வைட்டமின் ஈயை பயன்படுத்தி, நமது மூளையில் நிகழும் வேதியல் மாற்றங்களில் இருந்து பாதுகாக்கிறது. அது வழக்கமான மூளை இயக்கம் மற்றுட் நினைவாற்றலுக்கு வழிவகுக்கிறது.
ஆண் மற்றும் பெண்களில் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கிறது
இதில் உள்ள அதிக ஃபோலேட்கள், ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன. ஆண்களுக்கு ஸ்பெர்ம்களின் தரம், ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை மற்றும் பாலுணர்வு ஆகியவற்றை பொறுத்துதான், ஆண்மைதன்மை கணிக்கப்படுகிறது.
கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.
பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது. ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் இரண்டும் கருவுறுதலை துரிதப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்கிறது
இது எனர்ஜி நிறைந்த ஒன்று என்பதால், இது அதிக நேரம் உங்களை திருப்தியாக வைக்கிறது. பசி மேலாண்மைக்கு உதவுகிறது. இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிட்டு உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள புரதம் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது. அதிக உடல் வளர்சிதை மாற்றம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வளர்சிதை மாற்ற காரணிகள் அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மனஅழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது
கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இத மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த கடலை வறுத்து அல்லது வேகவைத்து ஒரு கைப்பிடியளவு தினமும் எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகம் எடுத்துக்கொண்டால் இது அலர்ஜி, பருமன், ஊட்டச்சத்துக்களுக்கு எதிரான திறன், கல்லீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். எனவே கைப்பிடியளவை தாண்டக்கூடாது.
டாபிக்ஸ்