தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Eating Pickles And Danger Of Pickles

Health Tips: ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்

I Jayachandran HT Tamil

Mar 29, 2023, 09:22 PM IST

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஊறுகாய் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மையா அல்லது தீமையா என்பது பெரும் விவாதங்களுக்கும் உரிய விஷயமாக உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chia Seeds Drinks: கோடை கால புத்துணர்ச்சி..! உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சியா விதைகள் பானங்கள்

Benefits of Peaches: எடை குறைப்பு முதல் கண், சரும் பாதுகாப்பு வரை..! ஏராள நன்மைகளை கொண்டிருக்கும் பீச் பழங்கள்

Kiwi Benefits for Hair: தலை முடி பராமரிப்பிலும் கில்லியாக இருக்கும் கிவி பழம்! எப்படி தெரியுமா?

Uric Acid Problem : யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் பாருங்க!

வட இந்தியாவிலும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவிலும் ஊறுகாய் முக்கிய உணவாகத் திகழ்கிறது. அவர்கள் சாப்பிடும் சப்பாத்தி, ரொட்டி, சாதத்துக்கும் ஊறுகாயை மட்டுமே தொட்டுக் கொண்ட சாப்பிடும் வழக்கம் உள்ளது.

தக்காளி, முள்ளங்கி, பச்சை மிளகாய், கேரட் உள்பட பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்தியும் ஊறுகாய் செய்கின்றனர். அதேபோல் மீன், ஆட்டிறைச்சி, கோழி போன்ற அசைவ உணவுகளைப் பயன்படுத்தியும் ஊறுகாய் சாப்பிடுகின்றனர்.

தமிழகத்திலும் பரவலாக மாங்காய், பூண்டு, எலுமிச்சைப் பழத்தை வைத்து ஊறுகாய் செய்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.

ஊறுகாயில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் வெளிப்படையாகவே எச்சரிக்கின்றனர்.

இருந்தாலும் இன்றைக்கு பரவலாக மக்களிடையே ஊறுகாயைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஊறுகாய் சாப்பிடும் வழக்கம் நல்லதா அல்லது கெட்டதா என்பது குறித்து இனி பார்ப்போம்.

2018ஆம் ஆண்டில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயற்கையான மைக்ரோ ஃப்ளோராவால்

உணவைக் கெடுப்பதையும் மாசுபடுத்துவதையும் தாமதப்படுத்துவதே ஊறுகாயின் கொள்கை நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும் அதில் மசாலா, உப்பு, வினிகர், எண்ணெய் மற்றும் பிற வகையான அமிலங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதால் ஊறுகாயின் சுவை மற்றும் சத்தான மதிப்பு இரண்டும் மேம்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.

பழம், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை நொதித்தல் முறையில் ஊறுகாய்களாக பயன்படுத்துவதன் மூலம் ஊறுகாயில் உள்ள லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்டுகிறது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமிலங்கள் உங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகின்றன.

இதன் பொருள் பாரம்பரியமாக புளித்த ஊறுகாய்யை சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கும், மெட்டபாலிசத்துக்கும் உதவுகிறது. கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது..

மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதால் ஊறுகாயில் நுண்ணூட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் மேம்படுகின்றன.

ஊறுகாயை கொஞ்சமாக சாப்பிட்டால் ஒருவருக்கு ஊட்டச்சத்து அடர்த்தியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என இதன்மூலம் தெரியவந்துள்ளது.

ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது ஊறுகாயை அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று எனக்கூறலாம்.

ஊறுகாய்களில் அதிக அளவு உப்பு இருப்பதால் சோடியம் நிறைந்துள்ளது. அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது.

உப்பு மற்றும் எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன.

ஆனால் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்துக்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன.

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடும். ஏனென்றால், எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன.

அவை மிக மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது.

இது இதய நோய்கள், உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலில் வீக்கம், நீர் தேக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.

ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான காரம் வயிற்றில் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே ஊறுகாய் பிரியர்களை அதனை அளவோடு எடுத்துக் கொண்டால் நல்லது.

கிளினிக்கல் நியூட்ரிஷன் ரிசர்ச் இதழில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாரம்பரியமாக ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறிகள்

மற்றும் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடும் என்று கூறுகிறது.

தினசரி ஊறுகாய் சாப்பிடும் மக்கள் மிகவும் சுவையான உணவுகளுக்கு, குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகள் மீது பற்று வைக்கின்றனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அவர்களின் ஒட்டுமொத்த உணவு நுகர்வு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த உணவுகள் சுவையான அதேசமயத்தில் ஆரோக்கியமற்ற கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளால் செய்யப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது.

அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உயர் ரத்த அழுத்த அபாயங்களையும் அதிகரிக்கிறது.

எனவே ஊறுகாய் பிரியர்கள் அதன் சுவையை ருசிக்க வேண்டும் என்று விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான,

சீரான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ள ஊறுகாயை குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிடுங்கள்.

தினமும் ஊறுகாய் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது.

உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள். அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.

ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.

டாபிக்ஸ்