Benefits of Ajwain : குடல் ஆரோக்கியம் முதல் ஆர்த்ரிட்டிஸ் போக்குவது வரை ஓமத்தில் உள்ள நன்மைகள்!
Mar 30, 2024, 12:48 PM IST
Benefits of Ajwain : இதனால் தான் இந்த தண்ணீரை நீங்கள் காலையில் பருகவேண்டும். எனவே தினமும் காலையில் இந்த தண்ணீரைப்பருகி நன்மை பெறுங்கள்.
குடல் ஆரோக்கியம்
உங்களுக்கு வாயுத்தொடர்பான பிரச்னைகள், வயிறு வலி இருந்தால் இந்த தேநீரை நீங்கள் தினமும் பருகவேண்டும். இதில் உள்ள ஓமம், உங்கள் குடலை செரிமானத்துக்கு தயார்படுத்துகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால், உங்களுக்கு அசிடிட்டி தொல்லை மற்றும் குடல் இயங்குவதில் சிக்கல் போன்றவை இருக்காது.
தொற்றுகளை தடுக்கிறது
ஓமத்தில் ஆன்டிசெப்டிக், ஆன்டிமைக்ரோபையல் மற்றும் ஆன்டிபாராசிட்டிக் குணங்கள் உள்ளது. இது சளி, இருமல், காது, வாய் என அனைத்து பாகங்களில் ஏற்படும் தொற்றை தடுக்கிறது. மழைக்காலங்களில் கண் தொடர்பான தொற்றுகள் ஏற்படும். அந்த கிருமிகளை அடித்து விரட்டும் ஆற்றலைக்கொண்டது ஓமம். எனவே தொற்றுக்களை தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
சுவாசப்பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது
ஓமம் உங்கள் நுரையீரல் தொண்டையை சுத்தமாக பராமரிக்க உதவுகிறது. இதனால், அந்தப்பகுதிகளில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கிறது. இது ஆஸ்துமா நோயாளிக்கு உபயோகமானதாக உள்ளது. சுவாச மண்டலத்தில் காற்று உட்புகும் பாதைகளை ரிலாக்ஸ் செய்து, ஆஸ்துமா நோயாளிகள் சிரமமின்றி சுவாசிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பயன்படுகிறது
ஓமம் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. இது உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் பருமனை தடுக்கிறது. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றை குறைக்கிறது. உங்கள் இதயம் நன்முறையில் நீண்ட நாட்கள் செயல்படவேண்டுமெனில், அதற்கு ஓமம் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.
வலியை குறைக்க உதவுகிறது
ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வலி ஏற்படும். அவர்கள் தினமும் ஓமத்தை எடுத்துக்கொள்வது அவர்களுக்கு வலிகள் குறைய உதவும். இந்நோய் வீக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் அதற்கு உதவுகிறது.
இதில் உள்ள மற்ற புதினா, நெல்லிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவையும் மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான். எனவே இந்த தேநீர் உங்களுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதை பருகி நன்மை பெறுங்கள்.
இத்தனை நன்மைகள் நிறைந்த ஓமத்தை தினமும் தேநீராகப் பருகலாம்.
அதை தயாரிப்பது எப்படி?
ஓமம் – ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லிலிட்டர்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
இந்துப்பு – ஒரு சிட்டிகை
தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஓமம் சேர்த்து பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
வடிகட்டி அதில் எலுமிச்சை, தேன், இந்துப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக இதை பருவேண்டும்.
ஓமத்தில் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், டானின்கள், கிளைக்கோசைட்கள், ஈரப்பதம், சாப்போனின்கள், ஃப்ளேவோன்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், காப்பர், அயோடின், மாங்கனீஸ், தியாமின் மற்றும் ரிபோஃப்ளாவின் போன்ற மினரல்கள் ஆகியவை உள்ளன.
அவையனைத்தும் உங்களுக்கு அந்த நாளுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கின்றன. இதனால் தான் இந்த தண்ணீரை நீங்கள் காலையில் பருகவேண்டும். எனவே தினமும் காலையில் இந்த தண்ணீரைப்பருகி நன்மை பெறுங்கள்.
டாபிக்ஸ்