தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Amla Raitha You Can Make Gooseberry Tart In Ten Minutes What A Delicious Side Dish

Amla Raitha : பத்தே நிமிடத்தில் பட்டுன்னு செய்யலாம் நெல்லிக்காய் பச்சடி! எத்தனை சாத்தான சைட் டிஷ்!

Priyadarshini R HT Tamil
Mar 30, 2024 10:18 AM IST

Amla Raitha : சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த நெல்லிக்காய் பச்சடியை கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

Amla Raitha : பத்தே நிமிடத்தில் பட்டுன்னு செய்யலாம் நெல்லிக்காய் பச்சடி! எத்தனை சாத்தான சைட் டிஷ்!
Amla Raitha : பத்தே நிமிடத்தில் பட்டுன்னு செய்யலாம் நெல்லிக்காய் பச்சடி! எத்தனை சாத்தான சைட் டிஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். லேகியமாக செய்தால் அது நீண்ட நாட்கள் வரும்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது.

அல்சரை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய் லேகியமாக இருந்தாலும், இது ஜாம்போல்தான் இருக்கும் எனவே இதை சாப்பாத்தி மற்றும் பிரட்டில் வைத்து சாப்பிடலாம்.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். இதில் ஊறுகாய் கூட செய்தால் சுவை நன்றாக இருக்கும். வெறும் பச்சடி கூட செய்யலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 4

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

பச்சை மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 3 சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

நெல்லிக்காயை அலசி விதைகளை நீக்கி, நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய், நெல்லிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிர் சேர்த்து அதை அடிக்க வேண்டும். பின்னர் அதில் உப்பு, அரைத்த விழுது சேர்த்து ஒன்றாக கலந்துவிடவேண்டும்.

பின்னர் அதில் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

பின்னர் கடாயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பெருங்காய்தூள் சேர்த்து தாளித்து இறக்க வேண்டும்.

அதை நெல்லிக்காய் பச்சடியில் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இதை சாதம், சப்பாத்தி, பூரி என எதற்குவேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

குறிப்பு

நெல்லிக்காயின் துவர்ப்புச்சுவையை குறைக்க தயிரையும், தேங்காயையும் சேர்க்க வேண்டும்.

பெருங்காயத்தூளை பச்சையாகவும், தாளிப்பிலும் என இரண்டு முறையும் சேர்ப்பது பச்சடியின் சுவையை அதிகரிப்பதற்காகத்தான்.

கெட்டியான தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை பச்சடி செய்யுமுன் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால், இதை இரவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்ற வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம்.

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த நெல்லிக்காய் பச்சடியை கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்