தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Massage: ஆழ்ந்த தூக்கம், கூந்தல் வளர்ச்சிக்கும், ஸ்ட்ரெஸ்ஸை போக்கவும் உச்சந்தலை மசாஜ் சிகிச்சை

Massage: ஆழ்ந்த தூக்கம், கூந்தல் வளர்ச்சிக்கும், ஸ்ட்ரெஸ்ஸை போக்கவும் உச்சந்தலை மசாஜ் சிகிச்சை

I Jayachandran HT Tamil

May 19, 2023, 08:31 PM IST

google News
ஆழ்ந்த தூக்கம், கூந்தல் வளர்ச்சிக்கும் ஸ்ட்ரெஸ்ஸை போக்கவும் உச்சந்தலை மசாஜ் சிகிச்சை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஆழ்ந்த தூக்கம், கூந்தல் வளர்ச்சிக்கும் ஸ்ட்ரெஸ்ஸை போக்கவும் உச்சந்தலை மசாஜ் சிகிச்சை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஆழ்ந்த தூக்கம், கூந்தல் வளர்ச்சிக்கும் ஸ்ட்ரெஸ்ஸை போக்கவும் உச்சந்தலை மசாஜ் சிகிச்சை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

மசாஜ் செய்வதால் உடலுக்கு மிகுந்த பலன்கள் உள்ளன. பாத மசாஜ், தலை மசாஜ், சுடுகல் மசாஜ், ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் எனப் பலவகைகள் உள்ளன. இதில் உச்சந்தலையில் செய்யப்படும் மசாஜினால் மன அழுத்தம் நீங்கி ஆழ்ந்த உறக்கம் உண்டாகிறது. இதனால் மிகுந்த நன்மைகள் உள்ளன.

வளர்ந்து வரும், இளம் தலைமுறையினர் பலருக்கு பாட்டி மற்றும் அம்மாவின் கூந்தல் பராமரிப்பு பற்றி தெரிய நியாயம் இல்லை. அதாவது உச்சந்தலையில் எண்ணெய் ஊற்றி, அன்பும் அக்கறையும் கலந்து நன்கு மசாஜ் செய்வார்கள். அந்த வகையான மசாஜ்களை இந்த தலைமுறையினர் யாரும் செய்வதில்லை. இது, அன்றைக்கு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் நடந்தது. அதாவது, வெது வெதுப்பான எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி மாசாஜ் செய்து கூந்தலுக்கான நன்மைகளை தெரிந்தோ தெரியாமலோ பெற்றுக்கொண்டிருந்தார்கள். இப்போதைய தலைமுறை அந்த பழமையான முறையை சொல்லி தந்து, அழகான கூந்தலைப் பெற வழி காட்டுகிறோம்.

ஸ்ட்ரெஸை விரட்டுங்கள்-

உஞ்களுடைய நாள் எவ்வளவு வேகமாக ஓடினாலும், உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ்ஜை நிதானமாகவும் ஆழ்ந்தும் செய்ய வேண்டும். குறிப்பாக, மன அழுத்தம், வேலைப்பழு மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் கூந்தல் வீழ்ச்சியடையலாம்.அதை மசாஜ் செய்வதன் மூலமாக மீட்டெடுக்க முடியும். உச்சந்தலையில் மசாஜ் செய்வதனால், செரடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால், உடலில் ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. இந்த மாற்றம் நரம்பியல் வழியாக கடத்தப்பட்டு மன அழுத்தம் மற்றும் கூந்தல் வீழ்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது, ​​உங்கள் கழுத்தையும் தோள்களையும் முழுமையான தளர்வுடன் வைத்திருக்கவும்.

கூந்தல் வேர்கள் பலப்படும்-

ஆரோக்கியமான கூந்தலுக்கு உச்சந்தலையில் வலுவான வேர்கள் இருப்பது அவசியம். இதற்கு வாரம் ஒரு முறை உச்சந்தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம். உலர்ந்த மற்றும் சீரற்ற உச்சந்தலையில் கூந்தல் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலமாக இறந்த செல்களை அகற்றி புதிய செல்களைப் பெற முடியும்.

பெரும்பாலான மக்கள் முடி நீளத்துக்கு ஏற்ப எண்ணெய் தடவுகிறார்கள்.

அதற்கு பதிலாக, நீங்கள் எண்ணெய்யை நேரடியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும். இந்துலேகா பிரிங்கா போன்ற எண்ணெயைப் பயன்படுத்தி, அதன் உயர்தர மருத்துவ எண்ணெயை நேரடியாக உச்சந்தலையில் செலுத்துவதன் மூலம், வேர்களை அடைந்து, முடி உதிர்தலை குறைத்து, உச்சந்தலையில் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மெதுவாக பாட்டில்லில் எண்யெய்யை ஊற்றி உச்சந்தலையில் முழுவதும் சீப்பு பயன்படுத்தி எண்ணெயைத் தேய்க்கவும். பின்னர் விரல் நுனியால் மசாஜ் செய்யவும்.

ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது-

உச்சந்தலையில் மசாஜ் செய்வதனால் முகம் மற்றும் தலையில் சுழற்சி அதிகரிக்கிறது. இதன்மூலம் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. அதிரித்த ரத்த ஓட்டம் உங்கள் உச்சந்தலையில் இருந்து ஆரோக்கியமான கூந்தலை வளரச் செய்கிறது. அதாவது, உச்சந்தலையில் உள்ள தமனிகளை நீக்குவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியின் சுழற்சியை நீடிக்க செய்கிறது.

ரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் மூளை மான்டிங் செய்து பதற்றம் குறைகிறது. மசாஜ்ஜை உங்கள் கைகளால் தொடங்குங்கள், தலையைச் சுற்றி மசாஜ் செய்து, உங்கள் தலையின் உச்சியில் இரண்டு பக்கங்களிலும் மேல்நோக்கி நகர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்தயபடி செல்லவும்.

நன்றாக தூங்க செய்கிறது-

நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு, உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதாவது, எல்லா விளக்குகளையும் நிறுத்தி விடுங்கள். அல்லது கம்மியான ஒளி வெளிச்சத்தில் எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள். ஒவ்வொரு இரவிலும் வழக்கமாக இதைச் செய்யுங்கள். அதே நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கும் வசதியாக இருக்க வேண்டும். உச்சந்தலை மசாஜ் சோர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் அதீத ஆற்றலை உணரமுடியும்.

15 நிமிடங்களுக்கு ஓருமுறை மென்மையான மசாஜ் செய்து , ஓய்வாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்-

* ஷாம்புக்கு தேய்ப்பதற்கு முன் எண்ணெய்யை உச்சந்தலையில் மசாஜ் செய்வது எப்போதும் நல்லது: ஈரமாக இருக்கும் போது முடி மிகவும் பலவீனமாக இருக்கும். மழைக்காலத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும். மேற்கண்ட முறையை பின்பற்றுவதன் மூலம் தடுக்க முடியும்.

சரியான எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பது, கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியம்:

கூந்தல் வரும்போது, தேங்காய் எண்ணெய் போன்று எதுவும் இல்லை. ஆனால், கூந்தல் வளரும்போது எண்ணெய்கள் அவசியம். இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மூலிகை போன்ற பொருட்கள் உட்செல்லும்போது, இன்னும் நல்ல பலன் கிடைக்கிறது. இந்தப் பலன் இந்துலேகா பிரிங்கா ஆயுர்வேத எண்ணெய்யில் இருக்கிறது.

மசாஜ் செய்ய உங்கள் நகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:

மசாஜ் செய்வதற்கு நகங்களை பயன்படுத்தக்கூடாது. ஓருவேளை அப்படி பயன்படுத்தினால் தலையில் உள்ள அழுக்கை அகற்றிவிட முடியும் என்று நினைத்தால் அது தவறு. நகங்களில் மசாஜ் செய்தால் கூடுதல் சிக்கலை உருவாக்கும். அதனால், நகத்தை மறைக்கும் உறையைப்பயன்படுத்தி மசாஜ் செய்யவும். இதன் மூலம் தலைக்கு அதிகமான அழுத்தத்தை தர முடியும்.

மசாஜ் போது முடி சிக்கலாவதை தவிர்க்க:

தலையில் மசாஜ் செய்வது எளிது. ஒருவேளை கூந்தலில் சிக்கல் ஏற்பட்டால், இந்துலேகா ஹேர் ஆயிலின் செல்ஃபி சீப்பை பயன்படுத்துங்கள். மற்ற எண்ணெய்களைவிட, இது தூசி மற்றும் அழுக்கை அகற்றி கூந்தலில் முடிச்சு விழாமல் காப்பாற்ற உதவும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி