தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beans Muparupu Kootu : பீன்ஸ் மூப்பருப்பு கூட்டு; வித்யாசமான சுவையில் ஆளை அசத்தும்! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!

Beans Muparupu Kootu : பீன்ஸ் மூப்பருப்பு கூட்டு; வித்யாசமான சுவையில் ஆளை அசத்தும்! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Sep 17, 2024, 03:11 PM IST

google News
Beans Muparupu Kootu : பீன்ஸ் மூப்பருப்பு கூட்டு, வித்யாசமான சுவையில் ஆளை அசத்தும். ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதற்கு தேவையான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Beans Muparupu Kootu : பீன்ஸ் மூப்பருப்பு கூட்டு, வித்யாசமான சுவையில் ஆளை அசத்தும். ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதற்கு தேவையான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Beans Muparupu Kootu : பீன்ஸ் மூப்பருப்பு கூட்டு, வித்யாசமான சுவையில் ஆளை அசத்தும். ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதற்கு தேவையான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

பீன்ஸ் – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)

பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்

துவரம் பருப்பு – 4 ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – கால் ஸ்பூன்

பூண்டு – 4 பல்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

மூன்று பருப்புகளையும் ஒன்றாக்கி மஞ்சள் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து முக்கால் பதம் வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் வேகவைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ், வெங்காயம், உப்பு போட்டு வேகவிடவேண்டும். அதில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்து ஊற்றி கொதிக்கவிடவேண்டும். அனைத்தும் நன்றாக வெந்து பச்சை வாசம் போகவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வரமிளகாய், கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு தாளித்து கூட்டில் சேர்த்து இறக்கவேண்டும். சூப்பர் சுவையில் பீன்ஸ் முப்பருப்பு கூட்டு தயார். இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இந்த ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைப்பீர்கள். இதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சுவையானதாக இருக்கும்.

பீன்ஸில் உள்ள சத்துக்கள்

ஒரு கப் பீன்ஸில் 31 கலோரிகள் உள்ளன. 0 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 3.4 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் கே 18 சதவீதம், சி 18 சதவீதம், வைட்டமின் பி9 9 சதவீதம், இரும்புச்சத்து 6 சதவீதம், பொட்டாசியச்சத்து 4 சதவீதம் உள்ளது.

பீன்ஸின் நன்மைகள்

செரிமானத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலகுவாக்குகிறது.

பசியை கட்டுப்படுத்துகிறது

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதுதான் உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற ஊட்டச்சத்துக்களும் தேவை.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன்தான் உங்களை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இதய நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதை தடுக்க அதிகம் பச்சை காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதய நோய் ஆபத்தை தடுக்கலாம். பச்சை பீன்ஸில் உள்ள ஃபோலேட்கள் மற்றம் பெட்டாசியம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி