விரைவில் பஜாஜ் - KTM கூட்டணியில் எலக்ட்ரிக் பைக்!
Aug 01, 2022, 02:54 PM IST
எலக்ட்ரிக் பைக் தயாரிப்புக்காக பஜாஜ் மற்றும் KTM கூட்டணி அமைத்துள்ளது.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இருசக்கர வாகன நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. நல்ல மைலேஜ் தரும் பட்ஜெட் பைக்குகளை விற்பனை செய்யும் பஜாஜ் நிறுவனத்திற்கு என வாடிக்கையாளர்களிடையே நல்ல பெயர் உள்ளது.
அதேசமயம் உயர்ரக பைக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது ஹை ஸ்பீட் பைக்குகளில் இளைஞர்கள் விரும்பி வருகின்றனர். அந்த வகையில் KTM பைக் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் அனைத்து நிறுவனங்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சில நிறுவனங்கள் கூட்டணி அமைத்து வாகனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பஜாஜ் நிறுவனம், ப்ரீமியம் பைக் உற்பத்தியாளர் KTM ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் கூட்டணி வருங்காலங்களில் உலகளவில் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், " KTM நிறுவனத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உயர் ரக எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவது குறித்து இணைந்து வேலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் இந்த திட்டம் குறித்து அனைவருக்கும் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.