நீங்கள் தாராளமாக சட்னி சாப்பிடுபவரா? ரயில்வே தண்ணி சட்னி; வெங்கடேஷ் பட் ஸ்டைலில் செய்யலாமா?
Dec 20, 2024, 04:00 PM IST
ரயில்வே தண்ணீ சட்னி செய்வது எப்படி?
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, இட்லியின் மேல் தாராளமாக ஊற்றிக்கொடுப்பார்களே ஒரு வெள்ளைச் சட்னி. அது நல்ல சுவையாக இருக்கும். அதை ரயில் பயணத்தின்போதே சாப்பிடும்போது நன்றாக இருக்கும். அதை எப்படி நாம் வீட்டிலேயே செய்யமுடியும் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் சட்னி பிரியர் என்றால், இந்தச்சட்னி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே கட்டாயம் முயற்சித்து பாருங்கள். இந்த சட்னியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களே ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் விரும்புவீர்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாமா? இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானதும் ஆகும்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ஒரு கப்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
புளி பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 2 டம்ளர்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பொட்டுக்கடலை, தேங்காய், மல்லித்தழை, இஞ்சி, பூண்டு, உப்பு, பச்சை மிளகாய், புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நல்ல தண்ணீராகக் கரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அந்த சட்னியில் சேர்க்கவேண்டும். இதை இட்லியுடன் தாராளமாக பரிமாறி சாப்பிட சுவை அள்ளும்.
நீங்கள் சட்னி பிரியர் என்றால் இந்த சட்னியைக் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். ஏனென்றால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று கட்டாயம் கேட்பீர்கள்.
இதையும் படிங்க,
உங்களுக்கு மற்றுமொரு தகவலும் உள்ளது. தலைமுடி ஆரோக்கியம் காக்க ஒரு சிறிய குறிப்பை பாருங்கள்.
அரிசி வடித்த கஞ்சியை தலைமுடிக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அரிசி கஞ்சியை பல காலமாக நமது நாட்டில் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவி செய்கிறது.
உங்கள் தலைமுடிக்கு நீங்கள் தொடர்ந்த் சாதம் வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலை வலுப்படுத்துகிறது. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மிருதுவான பளபளக்கும் கூந்தலைக் கொடுக்கிறது. வேர்கால்களுக்கு நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. மாசு, வெப்பத்தால் தலைமுடி சேதமடைவதை தடுக்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்