Apple iPhone 16 Sales: முதல் நாளிலேயே களைக்கட்டும் ஆப்பிள் ஐபோன் 16 விற்பனை! இந்திய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Sep 20, 2024, 02:21 PM IST
இந்திய பட்ஜெட்டில் இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவித்த பின்னர், இன்று விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த போனை வாங்க வாடிக்கையாளர்கள் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
ஆப்பிள் நிறுவனத்தால் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டுள்ள ஆப்பிள் ஐபோன் 16 இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர்கள் திறந்து ஐபோன்கள் விற்பனை செய்யபபட்டு வருகின்றன. இந்திய பட்ஜெட்டில் இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவித்த பின்னர், இன்று விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த போனை வாங்க வாடிக்கையாளர்கள் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
20 மணி நேர வரிசை
உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாறி வரும் நவீன தொழில் நுட்ப முறைகளை உடனே உற்பத்தி பொருட்களில் கொண்டு வந்து வாடிக்ககாயாளர்களை கவரும் உத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பின்பற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவில் தனது ஸ்டோர்களை ஆப்பிள் இந்தியாவில் திறந்தது.
இந்தியாவிலும் ஐபோன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர் எனபதற்க்கு சான்றாக ஆப்பிள் ஐபோன் 16 ஐ வாங்குவதற்காக தொடர்ந்து 20 மணி நேரமாக வாடிக்கையாளர்கள் காத்திருந்து அதனை வாங்கி சென்று உள்ளனர் .
ஐபோன் சீரிஸ்
6.1 இன்ச் திரை உடைய ஐபோன் 16, 6.7 இன்ச் திரை உடைய ஐபோன் 16+, 6.3 இன்ச் திரை உடைய ஐபோன் 16 புரோ மற்றும் 6.9 இன்ச் உடைய ஐபோன் 16 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன் இதற்கான முன்பதிவு தொடங்கியது இதுவே மிகப்பெரிய அளவிலான திரை ஆகும்.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் இரண்டும் பிங்க், வெள்ளை, கருப்பு நிறங்களில் உள்ளன,. ப்ரோ மாடல்கள் பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் டெசர்ட் டைட்டானியம் நிறங்ககளில் உள்ளன.
இறக்குமதி வரி குறைப்பால் குறைந்த விலை
இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ஆப்பிள் ஸ்டோர்கள் அமைந்துள்ளன. மும்பையில் உள்ள ஸ்டோரில் இன்று காலை வாடிக்கையாளர்களை உற்சாகமாக பணியாளர்கள் வரவேற்றனர். இந்திய பட்ஜெட்டில் இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டது. இதனை அடுத்து தறப்போது இந்த போன் விலையும் குறைந்து உள்ளது. மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சில வங்கி கார்டுகளில் சலுகை, பழைய ஐபோன் வைத்திருப்பவர்கள் பரிமாற்றும் முறை மூலம் வழியாக சலுகை என பல சலுகைகள் உள்ளன.
இதில் அதிவேகமாக இயங்கும் A18 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பல புதிய அம்சங்ககளும் புகுத்தப்பட்டுள்ளன. பொதுவாகவே ஐபோனின் கேமரா அதிக பிக்சல்களை கொண்டிருக்கும். இப்போது மேலும் மேம்படுத்தப்பட்டு 48 மெகாபிக்ஸல் அளவில் இந்த கேமராக்கள் உள்ளன. 2x அளவில் ஜூம் செய்து போட்டோக்கள் எடுக்கும் அம்சம் உள்ளது. மேலும் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இதில் தெளிவாக போட்டோக்கள் எடுக்கலாம். புரோ மாடலில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது.
டாபிக்ஸ்