தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இவையல்லாம் அந்தக்காலத்து ராஜாக்கள் சாப்பிட்ட போஜனங்களாம்!

இவையல்லாம் அந்தக்காலத்து ராஜாக்கள் சாப்பிட்ட போஜனங்களாம்!

I Jayachandran HT Tamil

Dec 04, 2022, 09:07 PM IST

அந்தக் காலத்தில் மன்னர்கள் என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிட்டு இருப்பார்கள்..? என அறிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்! பிரமிக்க வைக்கும் உணவு வகைகளின் பட்டியலைப் பார்த்தால் ஒரு வேளை உணவுக்கு இத்தனை வகையறாக்களா என மலைக்க வைக்கிறது!
அந்தக் காலத்தில் மன்னர்கள் என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிட்டு இருப்பார்கள்..? என அறிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்! பிரமிக்க வைக்கும் உணவு வகைகளின் பட்டியலைப் பார்த்தால் ஒரு வேளை உணவுக்கு இத்தனை வகையறாக்களா என மலைக்க வைக்கிறது!

அந்தக் காலத்தில் மன்னர்கள் என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிட்டு இருப்பார்கள்..? என அறிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்! பிரமிக்க வைக்கும் உணவு வகைகளின் பட்டியலைப் பார்த்தால் ஒரு வேளை உணவுக்கு இத்தனை வகையறாக்களா என மலைக்க வைக்கிறது!

நாயக்க மன்னர்கள் என்னென்ன வகை உணவுகளை உட் கொண்டனர் என்பதற்கு விடை சொல்கிறது நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய ரகுநாதப்பதயம் எனும் நூல்!

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

இந்த நூல் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரில் வரான ரகுநாத நாயக்கர் தன் தேவியர் மூவருடன் சேர்ந்து சாருவிலாச போஜன மண்டபத்திற்கு வந்து உணவருந்தும் காட்சியை விவரிக்கிறது!

ஒரு மிகப் பெரிய மேஜையில் தங்க தாம்பாலம்! அதில் வாழை இலை விரித்து உணவு பறிமாறப்பட்டதாம்! மற்றும் பல சின்னச் சின்ன தங்கம் மற்றும் வெள்ளிக் கின்னங்களில் ஏராளமான பக்க உணவுகள் வைக்கப்பட்டு இருந்தன! சில வகை உணவுகள் வாழை தொன்னைகளிலும் வைக்கப்பட்டனவாம்!

அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்;

இனிப்பு வகைகள்:

போளி, மாண்டே, லட்டு, பூரண கலச மோதகம், கஜ்ஜாயம் (சேமியாவில் செய்தது), அதிரசம், பருப்பு வைத்த மோதகம், ஸாரத்துலு, மணுகு பூல் (இனிப்பு முள் முருக்கு), மிகட் சட்லு – பாஸந்தி

வடை வகைகள்:

கறி வடை, தயிர் வடை, ஆம வடை

ரொட்டி வகைகள்:

தேங்காய் ரொட்டி, வறுவல் ரொட்டி, சாம்பார் ரொட்டி

பானங்கள்:

திரட்டுப் பால், தேங்காய் பால், பன்னீர் பாயாசம், ஜீரகப் பாயாசம், குளிர்ந்த பாயாசம், ஜொஜ்ஜி பாயாசம்

பழ வகைகள்:

ரசதாழப் பழம், தேன் கலந்த பழாப்பழம், தேன் கலந்த மாம்பழம், தேன் கலந்த திராட்சைப் பழம், பல தேசங்களில் விளையும் பேரிச்சம் பழம், நேரேடு, ரேடு,

விளாம்பழம், கித்தடி, பாலபண்டலு- வாழைப்பழம், வெள்ளரிப் பழம், மாதுளம் பழம்

பிரதான உணவு வகைகள்:

சீகரணி மற்றும் சர்க்கரை சாதம், பலவிதமான அன்னங்கள், பல வகை காய்கறிகளில் செய்த உணவு வகைகள், அப்பளம் எள்ளுப் பொடியிட்ட கற்பூரக் கோழி,

தேங்காய் பொடி, கறிவேப்பலைப் பொடி உள்ளிட்ட பொருள்கள் கலந்த குங்குமக் கோழி, உளுந்து கடலைப்பருப்பு சானகி சூரணம் ஆகிய பொருள்கள் கலந்து தயாரிக்கப்பட்ட கஸ்தூரிக் கோழி, சர்க்கரை, வெண்ணை உள்ளிட்ட பொருள்கள் கலந்து தயாரிக்கபெற்ற பால் கோழி, வெங்காயம், பூண்டு மசாலாப் பொடிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கட்டுக் கோழி, நுலுவக் கோழி, மீன் வறுவல் வகைகள்

பொறியல் வகைகள்:

கொத்தவரை பொறியல், வாசனையுள்ள ஜாலபத்ரி, ஜாதிக்காய், பருப்பு வகைகள் கலந்த பிரிஜ்ஜி, வடாம் பொறித்து கூட்டின பொடிமாஸ்கறி, அப்பளம் – வடாம்

எலுமிச்சை ரசம், உப்பு ரசம், நீர் மோர், ஏலம், சுக்கு, வெட்டி வேர் கலந்த தண்ணீர்

பிரமிக்க வைக்கும் இவை, ஒரு வேளைக்கான உணவுப் பட்டியலாகும். இவை எந்த அளவுக்கு மன்னர்கள் மிகுந்த போஜனப் பிரியர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது!

இதே காலகட்டத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பான்மையான மக்கள் வெறும் கஞ்சி உணவை மட்டுமே அறிந்திருந்தனர்! அரண்மனை மன்னர்களும், அவர் தம் உறவுகளும், அமைச்சர்களும், தளபதிகளும், அமைச்சர்களும் மிக சுகபோக வாழ்வு வாழ்ந்த போதிலும் பெருவாரியான பாமர மக்களுக்கு அரை வயிற்றுக் கஞ்சியே உணவாக இருந்துள்ளது எனவும் தெரிய வருகிறது.

இது ஏதோ நாயக்க மன்னர் காலகட்டத்தில் மட்டுமல்ல, ஏடு அறிந்த வரலாற்றுக் காலங்கள் முழுமையும் சிந்தனையற்ற பாமர மக்களும் அவர்களுடைய குழந்தைகளும், வாரிசுகளும் சோற்றுக்கு சிங்கியடித்து பிச்சையெடுத்து வாழ்ந்தே வந்துள்ளனர்! வரலாற்று காலங்கள் பூராவும் ஆட்சியாளர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், எடுபடிகளும் உண்டுக் கொழுக்கும்படியான பல்வேறு வகையான உணவு வகைகளை தின்று ஏப்பம் விட்டு திரிந்தே வந்துள்ளனர். இவற்றைத் தான் உலக நாடுகளில் கிடைத்துள்ள குறிப்புகளும், இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் இலக்கியப் பதிவுகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.