Aging Like Fine Wine : இளம் வயதிலே வயோதிக தோற்றமா? வயதானலும் இளமையாக இருக்கவேண்டுமா? இதோ வழிகள்!
Sep 17, 2024, 01:03 PM IST
Aging Like Fine Wine : இளம் வயதிலே வயோதிக தோற்றமா? வயதானலும் இளமையாக இருக்கவேண்டுமா? இதோ 40 வயதுக்கு மேல் இதை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
இளம் வயதிலேயே உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்பட்டுவிட்டால் நீங்கள் வயதாகும்போது இன்னும் அந்த தோற்றம் அதிகமாகிவிடும். எனவே அதை தடுக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். எப்படி அழகாக வயதாவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இளமை தோற்றத்துடனே வயோதிகத்தை நெருங்க வேண்டுமெனில் அதற்கு உங்களின மரபணுக்கள் மட்டும் காரணமாவதில்லை. நீங்கள் அதற்காக சில எளிய பழக்கங்களை கைகொண்டால் உங்களுக்கு அது வசப்படும். இது உங்கள் வாழ்நாளையும் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும். இந்த பழக்கவழக்கங்களை நீங்கள் பழகிக்கொள்ளவேண்டும். இது உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். உங்களை ஆரோக்கியமாக்கவும், சிறப்பாக்கவும் உதவும்.
சுய அக்கறைக்கு முதலிடம் அல்லது முன்னுரிமை
வயது அதிகரிக்க அதிகரிக்க உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியம். உங்கள் உடல் மற்றும் மனஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதுதான் உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நீங்கள் உணர்வு ரீதியாக நன்றாக இருந்தால், அது உங்கள் மனஅழுத்தத்தை குறைத்து உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. உங்களை தியானம், புதிய பழக்கவழக்கங்கள் மற்றும் அமைதியான நேரம் என எப்போதும் எதிலாவது ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பொது உடல் நலனைப் போக்கும்.
சூரிய ஒளியில் செல்வதை குறையுங்கள்
சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைக்கும் என்றாலும், நீங்கள் அதில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது. மேலும் கடும் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றினால் அது உங்களுக்கு விரைவாகவே வயோதிக தோற்றத்தை ஏற்படுத்தும். வயது அறிகுறிகள், கருவளையங்கள், முகச்சுருக்கங்கள் மற்றும் சரும சேதம் ஆகியவை நீங்கள் அதிக நேரம் வெயிலில் செலவிட்டால் வரும். எப்போது தேவைப்பட்டாலும், வெளியில் செல்ல பாதுகாப்பு கவசங்களுடன் செல்லுங்கள். கையில் எப்போது சன் ஸ்கிரீன் வைத்திருங்கள்.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய உணவு
உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, நீங்கள் சாப்பிடும் உணவு அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், உங்கள் உடலில் செல்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. எனவே உங்கள் உடலின் வளர்சிதை சிறப்பாக இருக்க நீங்கள் சரியான இடைவெளியில் உணவு உட்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு தேவையான உணவை தேவையானபோது கொடுத்துவிடுங்கள்.
அன்பானவர்களுடன் தொடர்பில் இருங்கள்
உங்கள் வாழ்நாளை நீட்டிக்க நீங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருப்பது உதவுகிறது. எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. யாரெல்லாம் சமூகத்துடனும், மற்றவர்களுடனும் தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மன பிறழ்வு ஏற்படுவதில்லை. அவர்களுக்கு வயோதிகமும் பெரும் பிரச்னையாக இருப்பதில்லை. அவர்கள்தான் ஃபைன் வைனைப்போல் வயோதிக்கத்தை எட்டுகிறார்கள்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி உங்களை ஃபிட்டாக இருக்க வைப்பது மட்டுமல்ல, அது உங்களை இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களை எப்போதும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுத்திக்கொள்வது உங்களின் தசைகளை வலுவடையச் செய்கிறது. டேலும் உங்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும நெகிழ்வுத்தன்மையைத்தரும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அது உங்களின் தசைகளை முறையாக பராமரிக்க உதவும். இது உங்களை இயற்கையான முறையில் வயோதிகத்தை எட்ட வைக்கிறது.
தண்ணீர்
எப்போதும் உடலில் நீர்ச்சத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது உங்களுக்கு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் உங்கள் சரும ஆரோக்கியம் மேம்படவும், உடல் இயக்கங்களை அதிகரிக்கவும் உதவும். இல்லாவிட்டால் உங்கள் உடலில் பாதிப்புகள் ஏற்படும். எனவே செரிமானத்தை அதிகரிக்க அதிக தண்ணீரை பருகவேண்டும். மூட்டுகளில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்க உங்களுக்கு அதிக தண்ணீர் சத்து தேவை. சரும ஆரோக்கியத்துக்கு உதவும். இது உங்கள் சருமத்துக்கு இளமைத் தோற்றத்தை தரும்.
அமைதியான ஆழ்ந்த உறக்கம்
நீங்கள் தேவையான அளவு உறங்குவது உங்களின் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவும். போதிய உறக்கம் நீங்கள் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். உறக்கம் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு புத்துணர்ச்சி தரும். உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை முறைப்படுத்தும்.
டாபிக்ஸ்