தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deepavali Special Sweet : ரோஸ் குக்கீஸ் அல்லது அச்சு முறுக்கு, மொறு மொறுவென்று தீபாவளியை தித்திப்பாக்கும்!

Deepavali Special Sweet : ரோஸ் குக்கீஸ் அல்லது அச்சு முறுக்கு, மொறு மொறுவென்று தீபாவளியை தித்திப்பாக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 29, 2023, 10:09 AM IST

google News
Achu Murukku : ரோஸ் குக்கீஸ் அல்லது அச்சு முறுக்கு, மொறு மொறுவென்று தீபாவளியை தித்திப்பாக்கும். இந்த தீபாவளிக்கு கட்டாயம் செய்யவேண்டிய இனிப்பாகும்.
Achu Murukku : ரோஸ் குக்கீஸ் அல்லது அச்சு முறுக்கு, மொறு மொறுவென்று தீபாவளியை தித்திப்பாக்கும். இந்த தீபாவளிக்கு கட்டாயம் செய்யவேண்டிய இனிப்பாகும்.

Achu Murukku : ரோஸ் குக்கீஸ் அல்லது அச்சு முறுக்கு, மொறு மொறுவென்று தீபாவளியை தித்திப்பாக்கும். இந்த தீபாவளிக்கு கட்டாயம் செய்யவேண்டிய இனிப்பாகும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – ஒரு கப்

மைதா – கால் கப்

சர்க்கரை – அரை கப்

தேங்காய்ப்பால் – அரை கப்

முட்டை – 1 (உங்களுக்கு தேவைப்பட்டால் முட்டை இல்லாமலும் செய்யலாம். சேர்த்தும் செய்யலாம்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

எள் – 1 டேபிள் ஸ்பூன்

அச்சு முறுக்கு செய்யும் அச்சில் இரண்டு நாட்களுக்கு எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும்.

செய்முறை

இந்த எள் தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, சில நிமிடங்கள் நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது கரண்டி அல்லது பிளென்டர் என எதை வேண்டுமானாலும் உபயோகித்து அடித்துக்கொள்ளலாம்.

இந்தக்கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, ஒரு ஸ்பூன் எள்ளையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். வெள்ளை அல்லது கருப்பு எள் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். 

மிகவம் கெட்டியாக இருந்தால் முறுக்குகள் மொறுமொறுவென்று இருக்காது. தண்ணீராக இருந்தால் அச்சில் ஒட்டாது. எனவே மாவு பதம் மிக, மிக அவசியம். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் முறுக்கு அச்சை வைத்து நன்றாக சூடானதும், அதை எடுத்து மாவில் வைத்தால் மாவு அதில் ஒட்டிக்கொள்ளும்.

எனவே நீங்கள் கவனமாக மாவை எடுக்க வேண்டும். அச்சு 80 சதவீதம் அளவு மட்டுமே மூழ்க வேண்டும். அப்போதுதான் முறுக்கு எளிதாக வெளிவரும், முழுதாக மூழ்கவிட்டு எடுத்தால், முறுக்கு அச்சிலே ஒட்டிக்கொள்ளும்.

அதை காய்ந்த எண்ணெயில் வைத்தால் முறுக்கு பொரிந்து வரும். சில நிமிடங்களில் முறுக்கு அச்சை ஆட்டினால் முறுக்கு விடுபட்டுவிடும். அது மிகவும் ஒட்டிக்கொண்டு வராமல் அடம்பிடித்தால், அதை ஒரு ஃபோர்க் வைத்து குத்திவிடவேண்டும்.

மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிடவேண்டும். இருபுறமும் நன்றாக திருப்பி திருப்பி பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.

அந்த கொதிக்கும் எண்ணெயில் வைத்து அடுத்தடுத்து முறுக்குகளை சுட்டுக்கொள்ள வேண்டும்.

இதில் தேங்காயும் சேர்க்கலாம். ஆனால் அதை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி