தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோடைக்காலத்துக்கு ஏற்ற 5 தென்னிந்திய காலை சிற்றுண்டிகள்

கோடைக்காலத்துக்கு ஏற்ற 5 தென்னிந்திய காலை சிற்றுண்டிகள்

I Jayachandran HT Tamil

Jun 08, 2022, 12:49 PM IST

google News
கோடைக்காலத்தில் உடல் வறட்சி, சூட்டைத் தணிக்கும் 5 தென்னிந்திய காலை சிற்றுண்டி வகைகளை இங்கு காணலாம்.
கோடைக்காலத்தில் உடல் வறட்சி, சூட்டைத் தணிக்கும் 5 தென்னிந்திய காலை சிற்றுண்டி வகைகளை இங்கு காணலாம்.

கோடைக்காலத்தில் உடல் வறட்சி, சூட்டைத் தணிக்கும் 5 தென்னிந்திய காலை சிற்றுண்டி வகைகளை இங்கு காணலாம்.

கோடைக்கால வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் வழிதெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். உடல் வறட்சியைத் தவிர்த்து புத்துணர்வுடனும் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

உணவைப் பொறுத்தமட்டில் கோடைக்காலத்தில் தென்னிந்திய உணவுகள் இதற்குக் கைகொடுக்க வருகின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டு சரியாகச் செரிமாணம் ஆகாமல் நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருக்க இந்த 5 உணவுகள் உதவுகின்றன.

1. தயிர்சாதம்

கோடைக்காலத்தில் தயிர்சாதத்தை காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். வயிறுக்கு இதமாக இருக்கும். வேகவைத்த சாதம், தயிர், பச்சை மிளகாய், வெங்காயம், மாதுளை பழமுத்துகள் கலந்து தயிர்சாதத்தை செய்யவேண்டும். அத்துடன் கடுகு, கருவேப்பிலை உளுந்தப்பருப்பை எண்ணெயில் தாளித்து தயிர்சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிகுந்த பலன்கள் உள்ளது.

2. ரவை ஊத்தப்பம்

கோடைக்காலத்துக்கு மிக எளிய உணவு ரவை ஊத்தப்பம். இதில் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரவை ஊத்தப்பத்துக்கு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

3.ஆப்பம்

தென்னிந்தியாவில் காலைச்சிற்றுண்டியாக ஆப்பம், குருமா அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடுவது பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது. மெத்தென்ற ஆப்பத்தின் விளிம்புகள் மொறுமொறுவென இருப்பதால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இதற்கு காய்கறிகள் குருமா அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவு இது.

4.தக்காளி சாதம்

தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், குடைமிளகாய், வேகவைத்த சாதம் சேர்த்து தக்காளி சாதம் செய்யலாம். சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம்.

5.ஓட்ஸ் இட்லி

ஓட்ஸில் செய்யப்படும் இட்லி வழக்கமான இட்லியை விட சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். தக்காளி, புதினா, தேங்காய், கறிவேப்பிலை சட்னிகள் இதற்கு தோதாக இருக்கும்.

உடல் எடைகுறைப்புக்கும் ஓட்ஸ் இட்லி உதவும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி