தமிழ் செய்திகள்  /  Latest News  /  Tamil Live News Updates On September 25
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

September 25 TamilNews Updates: சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்-மோடி

Sep 25, 2022, 05:40 PM IST

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Sep 25, 2022, 05:40 PM IST

வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று

நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sep 25, 2022, 04:41 PM IST

மிதமான மழை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 25, 2022, 03:30 PM IST

குப்பைகள் வேதனை அளிக்கிறது - மோடி

கடற்கரையில் காணப்படும் குப்பைகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி மன்கிபாத் நிகழ்ச்சியில் கூறினார்.

Sep 25, 2022, 03:15 PM IST

மகாளய அமாவாசை

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

Sep 25, 2022, 02:17 PM IST

கோவையில் கோடீஸ்வரர்கள் அதிகம்

கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நகரங்களில் கோவை மாவட்டம் 2 ஆம் நிலை இடம் பிடித்து உள்ளது.

Sep 25, 2022, 01:38 PM IST

மகேஷ் பாபு படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வர்த்

ராஜமவுளி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் ஹாலிவுட் நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வர்த் நடிக்கவுள்ளதாக தகவல்.

Sep 25, 2022, 11:48 AM IST

அமைதியை நிலைநாட்ட வேண்டும் - கமல் ஹாசன்

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Sep 25, 2022, 10:49 AM IST

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 4,777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

 

Sep 25, 2022, 10:41 AM IST

எஸ்.பி.பியின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

பாடும் நிலா எஸ்.பி.பி மறைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது.

Sep 25, 2022, 10:09 AM IST

5ஜி சேவை

நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவையை பிரதமர் மோடி வரும் தொடங்கி வைக்கிறார்.

Sep 25, 2022, 09:26 AM IST

கடைசி டி-20 போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

Sep 25, 2022, 08:53 AM IST

மீன்பிடி திருவிழா

திருச்சி: மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா இன்று நடக்கிறது. 

Sep 25, 2022, 08:45 AM IST

என்ன சொல்லப் போகிறார் தோனி?

எம்.எஸ்.தோனி இன்று பிற்பகல் 2 மணிக்கு சமூக வலைதள நேரலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

Sep 25, 2022, 07:57 AM IST

சோனியா காந்தியுடன் அரசியல் பிரபலங்கள் சந்திப்பு

டெல்லியில் சோனியா காந்தியை இன்று லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் நேரில் சந்திக்கின்றனர்.

    பகிர்வு கட்டுரை