தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam:கார்த்திக்கை பிரிய முடிவெடுக்கும் தீபா; பேயாக வந்த விபத்து!

Karthigai Deepam:கார்த்திக்கை பிரிய முடிவெடுக்கும் தீபா; பேயாக வந்த விபத்து!

Mar 23, 2023, 04:36 PM IST

google News
ஜீ தமிழ் சீரியலில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் அப்டேட்டை இங்கு பார்க்கலாம்
ஜீ தமிழ் சீரியலில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் அப்டேட்டை இங்கு பார்க்கலாம்

ஜீ தமிழ் சீரியலில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் அப்டேட்டை இங்கு பார்க்கலாம்

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருக்கிறாள்; நீதிபதி அவளை விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் கார்த்திக் தீபா தன்னுடைய மனைவிதான் என சொல்லி, அங்கிருந்து அவளை அழைத்துச் செல்கிறான்.

தீபா யோசனையில் வர கார்த்திக் என்ன யோசிக்கிறீங்க என கேட்கிறான். அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறாள் தீபா சரி எனக்கு ரொம்ப பசிக்குது நீங்களும் காலையிலிருந்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என சொல்லி கார்த்திக் கிளம்புகிறான்.

இதனையடுத்து தீபா ரூமுக்கு சென்று முகத்தை அலம்பும் போது தாலி வந்து அவள் முன்னே விழுகிறது. தீபாவின் சிந்தனையில் குருஜி சொன்னது அனைத்தும் நடந்து விட்டது ஓடியது.

தீபா

சாப்பாடு வாங்கி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அபிராமி கார்த்திக்கு போன் போட்டு மீட்டிங்கெல்லாம் எப்படி போச்சு என விசாரிக்கிறார். கார்த்திக் அபிராமியிடம் நடந்த விஷயங்களை சொல்ல அபிராமி சந்தோஷப்படுகிறாள். உனக்கும் நட்சத்திராவுக்கும் நல்லபடியா கல்யாணம் ஆயிடுச்சான்னா இன்னும் சந்தோஷப்படுவேன் என சொல்லி போனை வைக்கிறாள்.

சாப்பிட்டு முடித்த பிறகு தீபா தன்னுடைய ரூமில் இருக்க அப்போது அவளது மனசாட்சி தோன்றி என்ன முடிவெடுத்து இருக்கிறாய் என கேட்கிறது. தான் காத்தியை விட்டு பிரிந்து போக போவதாக சொல்கிறாள். மனசாட்சி யோசிச்சு முடிவெடு என சொல்ல, தீபா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

அதன் பிறகு தீபா கார்த்தியிடம் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்ல பிறகு தூங்கி எழுந்த கார்த்தி தீபாவை தேடுகிறான். கோயிவிலுக்கு எங்கேயாவது போய் இருப்பாங்க என நினைத்து கோயிலுக்கு போய் தேட, கார்த்திக்கை பார்த்ததும் தீபா மறைந்து கொள்கிறாள்.

கார்த்திக்

இந்த நேரத்தில் ஜானகி கார்த்திக்கு போன் செய்து தீபா போன் எடுக்க மாட்றா அவகிட்ட போனை கொடுங்க என சொல்ல தீபா கோயிலுக்கு போய் இருப்பதாக சொல்லி கார்த்திக் சமாளிக்கிறான்.

பிறகு அங்கிருந்து வெளியே வரும் தீபா கார்த்திக்கு தெரியாமல் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வர, துரையின் ஆட்கள் அவளை பார்த்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து ஓட தீபா முயற்சி செய்யும்போது அந்த வழியாக வந்த காரின் மீது விழுந்து தீபா விபத்தில் சிக்குகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி