Karthigai Deepam:கார்த்திக் செய்த பொய் சத்தியம்;நட்சத்திராவிடம் சிக்கிய தீபா!
Mar 03, 2023, 06:13 PM IST
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளை டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னரே உங்களுக்கு தரும் முயற்சி இது
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் (03-03-2023) மைதிலி போலீசுடன் வந்து தீபாவை கார்த்தி இந்த வீட்டில் தான் ஒளித்து வைத்திருப்பதாக சொல்லி பிரச்சனை செய்ய முயல்கிறார். இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் அருணாச்சலம் சரி அவங்க தேடட்டும், தேடிய பிறகு தீபா இங்கே இல்லை என தெரிந்தால் நம்ம பையன் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்னு எல்லாருக்கும் தெரியும் என சொல்கிறார்.
கார்த்தியும் தேடட்டும் என சொல்ல, நட்சத்திரா மற்றும் மைதிலி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு தீபாவை வீடு முழுக்க தேடும் போலீஸ் கடைசியில் தீபா இல்லை என சொல்கிறது.
மைதிலி கார்த்தியை சத்தியம் செய்ய சொல்ல, ஐஸ்வர்யாவும் கார்த்தியை சத்தியம் செய்ய சொல்ல, கார்த்தி தீபா எங்கே இருக்காங்கனு எனக்கு தெரியாது என சத்தியம் செய்கிறான்.
இதற்கிடையில் தனது போனை தேடி கார்த்திக் ரூமுக்கு போன நட்சத்திரா அங்கு போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்து வீட்டுக்கு வரும் மைதிலி நாளைக்குள் தீபா இங்கே இருக்க வேண்டும் என தர்மலிங்கத்திடம் சத்தம் போட, மறுபக்கம் தீபா கார்த்தியிடம் மன்னிப்பு கேட்க, கார்த்தி எனக்கு இப்போ சத்தியத்தை விட உங்க உயிர் தான் முக்கியம் என சொல்ல தீபா ஃபீல் ஆகிறாள்.
அதன் பிறகு நட்சத்திரா தனது டூப்ளிகேட் அம்மாவிடம் போனை திருடினியா என கேட்க, முதலில் மறுக்கும் அவள் அதன் பிறகு ஆமாம் என சொல்லி போனை கொடுக்கிறாள்.
நட்சத்திரா போன் சார்ஜ் ஆகி ஆன் ஆனதும் ரெக்கார்ட் ஆன வீடியோவில் தீபா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அதன் பிறகு வேறொரு நம்பரில் இருந்து இந்த வீடியோவை அபிராமிக்கு அனுப்புகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறியகார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்