அடம்பிடித்த அபிராமி.. சாட ரெடியாக இருக்கும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்-கார்த்திகை தீபம் சீரியல்
Nov 25, 2024, 12:00 PM IST
கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளானால் அபிராமி வைத்த கோரிக்கை நிறைவேறியதா? இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், கார்த்திக் சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் கோயில் அருகே வந்து மீட்டிங்கை அட்டென்ட் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள்.
அதாவது, கார்த்திக் ஒரு வழியாக சாமுண்டீஸ்வரியிடமிருந்து தப்பித்த நிலையில், அபிராமி கார்த்திக்கு போன் செய்து நான் கோயில் பக்கத்துலதான் இருக்கேன். எனக்கு உடனே என்னுடைய மருமகள்களை பார்க்கணும், நீ அவங்கள கோயில்ல இருந்து கூட்டிட்டு வா இல்லனா… நான் கிளம்பி அங்க வந்துருவேன் என்று சொல்லி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள். கூடவே வந்து இளையராஜாவின் ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள்.
இதனால் கார்த்திக் சாமுண்டீஸ்வரியின் மூன்று மகள்களையும் கோயிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இந்த சமயத்தில் ஸ்வேதாவிடம் வா கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல, அவள் இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க என்று சொல்கிறாள்.
மூணு பேரும் வருவதாக இருந்தா வாங்க
நீ கோயிலுக்கு கூப்பிட்டா நான் வர மாட்டுறேனு உங்க அக்காக்களிடம் போய் சொல்லு; ஸ்வேதாவும் அதை அப்படியே கூறினாள். மற்ற இரண்டு பேரும் வந்து அவ கோயிலுக்கு கூப்பிட்டா போக மாட்டியா என சத்தம் போடுகின்றனர். ஒருத்தருக்காக எல்லாம் பெட்ரோல் செலவு பண்ணிக்கிட்டு கோயிலுக்கு போக முடியாது; நீங்க மூணு பேரும் வருவதாக இருந்தா வாங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து மூன்று பேரும் கோயிலுக்கு கிளம்ப இங்கே அபிராமி மற்றும் இளையராஜா ஆகியோர் தங்களது கெட்டப்பை எளிமையானவர்கள் போல மாற்றிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவராதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்