ஒரே இடத்துல இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி! எங்க தெரியுமா?
மைசூரில் நடந்து வரும் தசரா விழாவின் இறுதி நாளான யுவ தசரா நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர். ராகுமான் ஆகியோரது இசை நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரசித்த பெற்ற இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா ஒவ்வொரு மாநிலத்திலும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது வருகிறது. தமிழ்நாட்டிலும் கொலு வைத்து பாட்டு பாடி கடவுளை வணங்கி வருகின்றனர். இந்நிலையில் 9 நாள் இரவு நடக்கும் இந்த விழாவில் பல மாநிலங்களின் சிறப்பு விழாக்களும் நடக்கின்றன. அந்த வரிசையில் மைசூரில் நடக்கும் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். இதில் திரைத்துறையில் இருக்கும் பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு நடந்து வரும் தசரா விழாவில் அக்டோபர் 6 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் மைசூர் தசரா கொண்டாட்டத்தின் போது முதன்முறையாக இசைக் கலைஞர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் யுவ தசரா நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
டெக்கான் ஹெரால்டு செய்தியின்படி, மாவட்ட நிர்வாகம் மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து மைசூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள உத்தனஹள்ளி மைதானத்திற்கு இடம் மாற்றியுள்ளது. கூடுதலாக, நுழைவு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கச்சேரிகளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. விஐபி இருக்ககள் 8,000 ரூபாய்க்கும், அதே சமயம் பிரீமியம் கேலரிக்கான டிக்கெட்டுகளின் விலை 5,000ரூபாய்க்கும் மற்றும் மற்ற அனைத்து இருக்கைகளும் இலவசம் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.
யுவ தசரா
அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நாளில், ஸ்ரேயா கோஷல் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.நேற்று அக்டோபர் 7 ஆம் தேதி, இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ரவி பஸ்ரூர் மற்றும் அவரது குழுவினர் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். ராப் பாடகரும் பாடகருமான பாட்ஷா தனது குழுவினருடன் இணைந்து இன்று அக்டோபர் 8 ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்துகிறார். மேலும் நாளை அக்டோபர் 9 ஆம் தேதி ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது குழுவினரின் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைசூர் தசரா 2024
மைசூரில் தசரா கொண்டாட்டங்கள் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சாமுண்டி மலையில் தொடங்குகியது. கண்காட்சியை திறப்பு விழா நாளிலேயே தொடங்க அறிவுறுத்தப்பட்டு, தொடக்க நாளிலேயே ஸ்டால்கள் ஏற்பாடுகளை செய்ய துறை செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்