சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை.. யார்கிட்டேயும் கேட்கல.. பிரேம்ஜியை என்கூட வைச்சுகிட்டேன்:யுவன் சங்கர் ராஜா
Oct 14, 2024, 12:23 AM IST
சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை.. யார்கிட்டேயும் கேட்கல.. பிரேம்ஜியை என்கூட வைத்துக்கிட்டேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டியளித்துள்ளார்.
சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை என்பது குறித்தும் பிரேம்ஜியை தன்னோடு வைத்துக்கொண்டது குறித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில்,
’உங்கள் உறவினர்கள் கேங் கண்ணு வைக்கிற அளவுக்கு நெருக்கம்? மியூசிக் தவிர என்னப் பண்ணுவீங்க?
பதில் - பிரேம்ஜிகிட்ட மட்டும் இந்த சாஃப்ட்வேர் இருக்கு ஏன் முயற்சி செய்ய மாட்டினுற அப்படின்பேன். உடனே ட்ரை பண்றேன்பான். ட்ரை பண்றேன் சொல்லுவார்.
பிரேம்ஜி ரொம்ப ஈஸியான ஆளு அப்படிங்கிற ஃபீல் இருக்கு. அவர் டெக்னிக்கலி ஒரு ஸ்ட்ராங்க் ஆன ஆளா?
பதில்: அப்பயிருந்து கீ போர்டு வாசிப்பான். சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. மிகப்பெரிய சண்டை. அந்த நேரத்தில் பிரேம்கிட்ட என்ன செய்றேன்னு கேட்டேன். வித்யாசாகருக்கு வாசிக்கிறேன் அப்படின்னு சொன்னான். நாளையில் இருந்து இங்கே வந்திடு சொன்னேன். யார்கிட்டேயும் எதுவும் கேட்கல. அம்மாகிட்ட மட்டும் போய் சாப்பிடும்போது சொல்றேன். அப்பா ஒத்துக்கவே மாட்டேன்னு சொன்னார்.
அம்மாகிட்ட நீங்க அப்பாவை ஹேண்டில் பண்ணிக்கங்கன்னு சொல்லிட்டு நான் கூலாகப் போயிட்டேன். அந்தப் பெரிய சண்டையிலும் பிரேம் என்கூட தான் இருக்கார். வெங்கட் பிரபு அப்பப்போ வந்து பாடுவார். அப்படி சென்னை 600028 டேக் ஆஃப் ஆச்சு. நாங்க பெரியவங்க சண்டையைக் கண்டுக்கமாட்டோம்.
நிறையப் பாடல்கள் கார்த்திக் ராஜா, இளையராஜா சாருக்கு உதவி பண்ணியிருப்பார் போலேயே?
பதில்: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ பாட்டுக்கு, ஒட்டுமொத்தமாக புரோகிராமிங் செய்தது கார்த்திக் ராஜா தான். இப்படி நிறையப் பாடல்கள் இருக்கு.
கார்த்திக் ராஜாவின் திறமைக்கு ஏற்ற உயரம் கிடைக்கலன்னு நினைக்கிறீங்களா?
பதில்: கார்த்திக் ராஜா என்னைவிட திறமைசாலி. அவருக்கு எல்லாமே தெரியும். அவருக்கு இசையுடைய நோட்ஸ் எழுதத்தெரியும். அவருக்கு அதைப் படிக்கத் தெரியும். அவருக்குண்டான பிரேக் இன்னும் வரலை. அதுதான் நான் ஃபீல் பண்றேன்.
ஒருத்தர் பிராண்ட் வேல்யூ பண்ணிக்கிறது, அவரது வளர்ச்சியில் அங்கம் வகிக்குமா?
பதில்: அதை கண்டிப்பாக நம்புறேன். நம்பர்ஸ் கிடையாது. அது கலை சார்ந்தது. அது ரொம்ப முக்கியம்ன்னு நினைக்கிறேன்.
என் படங்களுக்கு மியூஸிக் செய்யிறதைக் குறைச்சுட்டீங்க?
பதில்: திட்டமிட்டு குறைக்கல. ஒவ்வொரு காலகட்டத்திலேயும் இசையமைப்பாளர்கள் அதிகரிச்சிட்டாங்க. அப்போது இயல்பாகவே படங்களின் எண்ணிக்கை குறையும் தானே.
நீங்க மிஸ் பண்ணியதாக எதை நினைக்கிறீர்கள்?
பதில்: சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்திருக்கலாம். நான் இஸ்லாமில் மாறியதும் டிவிட்டர் அக்கவுன்ட்டை க்ளோஸ் செய்தேன். அதை அப்படியே வைத்திருந்தால் ஓரளவு நன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைத் தான் சொல்றேன்.
நிறைய ஹிட்ஸ் கொடுத்திருக்கீங்க. நமக்கான சரியான இடம் கிடைக்கலைன்னு நினைச்சிருக்கீங்களா?
பதில்: நான் அப்படி நினைக்கல. ஆனால், ரசிகர்கள் அப்படி நினைக்கிறாங்க. இன்னும் தேசிய அளவில் போயிருக்கணும். மற்ற மொழிகளில் படம் பண்ணியிருக்கணும் அப்படி ரசிகர்கள் நினைக்கிறாங்க. நான் வெளிப்படையான ஆள். ஒரு படத்தோட கதையைக் கேட்கும்போது அது கனெக்ட் ஆச்சுன்னா மட்டும் தான் பண்ணுவேன். கனெக்ட் ஆகவில்லையென்றால் மியூஸிக் பண்ணமாட்டேன். அந்த ஆர்ட்டை தான் நம்புறேன்.
சோசியல் மீடியாவில் ஹிட்ஸ் வருவதை அழுத்தமாகப் பார்க்குறீங்களா?
பதில்: அப்படி கிடையாது. முன்னாடி எல்லாம் ஒரு பாட்டுப் பண்ணுவேன். ஹிட்டுன்னு சொல்வாங்க. அப்படியே அடுத்த பாட்டுக்குப் போய்டுவேன். எங்கோ காரில் போகும்போது டீக்கடையில் நம்ம பாட்டு ஓடும்போது, கேட்கும்போது தான் ஹிட்டுன்னு தெரியவரும். இப்போது ஒரு பாட்டு ரிலீஸ் ஆகப் போகுது என்றால் அதற்கு ஒருத்தர் முன்பே ஒரு அறிவிப்புவிடணும். இன்ஃபுளூயன்ஸர்ஸ் இருக்காங்க. யூட்யூபில் புரோமோசனுக்கு ஒரு தொகை இருக்கு. எல்லா வீடியோஸுக்கும் அப்படி சொல்லல. ஆனால், அப்படி பண்ணமுடியும்.
அதுதான் முன்பே சொன்னேன்ல, ஒரு கலையை ஒரு கலையாகத் தான் பார்க்கணும். நிறைய லட்சக்கணக்கான நல்ல பாடல்கள் பார்க்காமலேயே போயிடுவோம்.
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பாட்டுப் பண்ணுறேன். அது உண்மையாக செய்தால் மக்களிடம் போய்சேரும். இல்லையென்றால், அதை சரியாகப் போய் சேராது. அவ்வளவு தான்’ என பேசியிருக்கிறார், யுவன் சங்கர் ராஜா.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்
டாபிக்ஸ்