"நாக சைதன்யாவின் 2ம் திருமணமும் நிலைக்காது" ஜோசியம் சொன்னவரை சுத்து போட்ட கோர்ட்! அட்டாக் மோடில் மக்கள்
Nov 01, 2024, 07:55 AM IST
நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா திருமணம் நிலைக்காது என ஜோதிடம் பார்த்துக் கூறிய பிரபல ஜோதிடர் வேணு சுவாமியிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் நாக சைதன்யா- நடிகை ஷோபிதா துலிபாலாவிழ் திருமண ஏற்பாடுகள் டோலிவுட் முழுவதும் பரபர்ப்பாக பேசப்படும் நிலையில், பிரபல ஜோதிடர் அவர்களின் ஜாதகத்தைக் கணித்து, அவர்களுக்குள் ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்படும். அவர்கள் இருவரும் 3 வருடத்தில் பிரிந்து விடுவார்கள். இவர்கள் இருவரின் ஜாதகமும் 10 சதவீதம் தான் பொருந்திப் போகிறது எனக் கூறி இருந்தார்.
ஜோதிடருக்கு சுத்து போட்ட கோர்ட்
இவரது ஜோதிடக் கணிப்பு மிகவும் வைரலான நிலையில், வேணு சுவாமி மீது தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோதிடர், மன்னிப்புக் கோரியதுடன் தன்னை மகளிர் உரிமை ஆணையத்தினர் விசாரிக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜோதிடர் பேசிய விவகாரம் குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஷோபிதா- நாக சைதன்யா ஜாதகம் கணிப்பு
முன்னதாக, நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜாதகத்தை வழங்கிய பிரபல ஜோதிடர் வேணு சுவாமி தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
3 வருடங்கள் கழித்து சைதன்யாவிற்கும், சோபிதாவுக்கும் ஒரு பெண்ணால் பிரச்சனைகளும், சண்டைகளும் வரும். இவர்களது நிச்சயதார்த்தம் மற்றும் பிறந்த நட்சத்திரத்தின் விவரங்களைப் பார்த்தால், அவர்களால் ஒன்றாக இருக்க முடியாது, நிச்சயமாக பிரிந்து விடுவார்கள் என்று ஜோதிடர் வேணு சுவாமி கூறியிருந்தார்.
நேரமே சரியில்லை
மேலும், 2027 ஆம் ஆண்டு முதல் சோபிதா துளிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் சிக்கல்கள் இருக்கலாம். அவர்கள் நன்றாக இருப்பார்கள் ஆனால் அதன் பிறகு அவர்களின் திருமணம் நன்றாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
அவர்களுடைய ஜாதகம் பொருந்தவில்லை என்பது மட்டும் இல்லை, அவர்களுக்கு கொடுத்த நிச்சயதார்த்த நேரமும் சரியில்லை.
10% தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்
சமந்தாவின் ஜாதகத்தையும், ஷோபிதா ஜாதகத்தையும் அலசினால், நாக சைதன்யாவுடன் சமந்தாவின் திருமண வாழ்க்கை 50 சதவீதமும், ஷோபிதாவின் திருமண வாழ்க்கைக்கு 10 சதவீதமும் அளிப்பேன் என்றார்.
அத்துடன், நான் சொல்வதை தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தெரிந்து தவறு செய்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன். அகிலின் நிச்சயதார்த்தம் பற்றி அப்போதும் சொன்னேன். அது போல தான். நாக சைதன்யாவும், ஷோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது. அதுவும் ஒரு பெண்ணால் பிரிந்து விடுவார்கள் என்று தான் காலம் சொல்கிறது என்று கூறியிருந்தார்.
சமந்தா நாக சைதன்யா பிரிவை பொறுத்துக் கொள்ள முடி.யாத அவரது ரசிகர்கள் ஜோதிடரின் கருத்தை வைரலாக்கி வர இந்த விவகாரம் பூகம்பத்தை கிளப்பியது.
டாபிக்ஸ்