தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆரம்பமே இப்படியா.. மகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுத்த விஜய் சேதுபதி - ஏன் இப்படி ஓரவஞ்சனை?

ஆரம்பமே இப்படியா.. மகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுத்த விஜய் சேதுபதி - ஏன் இப்படி ஓரவஞ்சனை?

Aarthi Balaji HT Tamil

Oct 06, 2024, 07:52 PM IST

google News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சனா கலந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சொல்ல போனால் நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே "யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சனா கலந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சொல்ல போனால் நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே "யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சனா கலந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சொல்ல போனால் நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே "யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார்.

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

யார் இந்த சச்சனா

பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சச்சனா போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவே சில சீரியல்களில் நடித்து வந்தவர், கண்ணான கண்ணே சீரியலில் தான் அனைவருக்கும் பரிச்சையமாகி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சச்சனா நடிக்கும் போது 9ம் வகுப்பு படித்து வந்தாராம். பின், செங்கலம் என பெயரிடப்பட்ட வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருக்கிறாராம். ஆனால், இவர் சினிமாவில் முதல்முதலாக தோன்றியது நடிகர் கௌதம் கார்த்திக்கின் 1947 என்ற திரைப்படத்தில் தான். ஆனால், இந்தப்படம் அதிகம் மக்களிடம் ரீச் ஆகவில்லை.

இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்தார். படத்தில், சச்சனா, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணாகவும், அதிலிருந்து மீண்டு வந்து பேசும் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

எதிர்பாராத எண்டரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சனா கலந்து கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சொல்ல போனால் நிகழ்ச்சியில் எண்டரி கொடுத்தவுடன், விஜய் சேதுபதியே "யாரை கேட்டு நீ இங்க வந்த? என்று தான் கேள்வி கேட்டார். உனக்கு என்ன அறிவுரை சொல்வது என்று எனக்கு தெரியவே இல்லை. இவளை எனக்கு நல்லா தெரியும். என்ன சொல்வது என்று புரியவே இல்லை.

ஆனா ஒரு விஷயம் மட்டும் உனக்கு நான் சொல்கிறேன். உனக்கு என்னை அப்பா என்று கூப்பிட வேண்டுமா? கூப்பிடலாம்.. அதே போல் சார் என்று கூப்பிட வேண்டுமா? கூப்பிடலாம். அதற்கு என்று ஒழுங்காக விளையாடாமல் விக் எண்டில் வந்து அப்பா என்று சொல்ல கூடாது “ என்றார்.

இதை பார்த்த ரசிகர்கள் அது என்ன மகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இங்கும் அவர் அப்பாவை மிரட்டி ஆளும் மகளாக இருப்பாரா அல்லது, மற்றவர்களால் மிரட்டப்படுவாரா எனத் தெரியவில்லை.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை