பிக்பாஸ் வீட்டுக்கு போகும் விஜய் சேதுபதியின் மகள்.. மெட்டி ஒலி முதல் மஹாராஜா வரை.. சச்சனா குறித்து அறிந்ததும் அறியாததும்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக்பாஸ் வீட்டுக்கு போகும் விஜய் சேதுபதியின் மகள்.. மெட்டி ஒலி முதல் மஹாராஜா வரை.. சச்சனா குறித்து அறிந்ததும் அறியாததும்

பிக்பாஸ் வீட்டுக்கு போகும் விஜய் சேதுபதியின் மகள்.. மெட்டி ஒலி முதல் மஹாராஜா வரை.. சச்சனா குறித்து அறிந்ததும் அறியாததும்

Malavica Natarajan HT Tamil
Oct 06, 2024 06:52 PM IST

தமிழ் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது விஜய் சேதுபதியின் மகளாக நடித்து அசத்தியுள்ள சச்சனா பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்ல உள்ளார். அவர் குறித்து தெரிந்த விஷயங்களுடண் தெரியாத விஷயங்களையும் இங்கு காண்போம்.

பிக்பாஸ் வீட்டுக்கு போகும் விஜய் சேதுபதியின் மகள்.. மெட்டி ஒலி முதல் மஹாராஜா வரை.. சச்சனா குறித்து அறிந்ததும் அறியாததும்
பிக்பாஸ் வீட்டுக்கு போகும் விஜய் சேதுபதியின் மகள்.. மெட்டி ஒலி முதல் மஹாராஜா வரை.. சச்சனா குறித்து அறிந்ததும் அறியாததும்

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மஹாராஜாவாகவும், சச்சனா அவரது மகளாகவும் நடித்திருப்பார். சச்சனா, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணாகவும், அதிலிருந்து மீண்டு வந்து பேசும் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

குழந்தை நட்சத்திரம்

இந்நிலையில், சச்சனாவிற்கு மஹாராஜா தான் முதல் படம் என்றும், அவர் தன் முதல் படத்திலேயே அவரது திறமையை நிலைநாட்டிவிட்டார் எனவும் பலரும் கூறி வந்தனர். ஆனால், சச்சனா 6 மாத குழந்தையாக இருந்தோபோதே நடிக்க வந்துவிட்டாராம். இவர் தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சீரியலான மெட்டிஒலியில் தான் முதலில் நடித்துள்ளாராம். இந்த சீரியலில் நடிக்க வரும் போது அவருக்கு வயது 6 மாதம் தானாம்.

பின் குழந்தை நட்சத்திரமாகவே சில சீரியல்களில் நடித்து வந்தவர், கண்ணான கண்ணே சீரியலில் தான் அனைவருக்கும் பரிச்சையமாகி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சச்சனா நடிக்கும் போது 9ம் வகுப்பு படித்து வந்தாராம். பின், செங்கலம் என பெயரிடப்பட்ட வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருக்கிறாராம்.

சினிமா எண்ட்ரி

ஆனால், இவர் சினிமாவில் முதல்முதலாக தோன்றியது நடிகர் கௌதம் கார்த்திக்கின் 1947 என்ற திரைப்படத்தில் தான். ஆனால், இந்தப்படம் அதிகம் மக்களிடம் ரீச் ஆகவில்லை. இதற்கு அடுத்ததாகத் தான் விஜய் சேதுபதியுடன் அவரது மகளாக மஹாராஜா படத்தில் சச்சனா நடித்தார். ஆனால், இதுதான் இவரது முதல் படம் என அனைவரும் நினைத்துள்ளனர்.

மறுத்த விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் ஆடிஷனில் சச்சனா கலந்து கொண்டபோது, விஜய் சேதுபதி, சச்சனாவை மறுத்துவிட்டாராம். பார்ப்பதற்கு ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கிறார் என விஜய் சேதுபதி கூறினாராம். ஆனால், படத்தின் இயக்குநரான நித்திலன் தான் சச்சனா இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனக் கூறி விஜய் சேதுபதியை வற்புறுத்தினாராம். பின், படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, இயக்குநர் நித்திலனிடம் சச்சனாவை தேர்வு செய்ததற்கு பாராட்டினாராம். ஏனெனில், சச்சனா அந்த அளவிற்கு நடித்திருந்தாராம்.

தேடிவந்த வாய்ப்பு

படம் நடிக்கும் போது கல்லூரி படித்து வந்த சச்சனா, தற்போது அடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தால், அதிலும் தனது பெயரை நீருபிக்க காத்திருக்கிறாராம். திமிரான, அடாவடியான், அப்பாவை அடக்கும் பெண்ணாக, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும் பெண்ணாக என சச்சனா தனது நடிப்பில் வெரைட்டியை காட்டி இருப்பார். இவர், சில நாட்களாக அதிக அளவில் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, பிக்பாஸ் சீசன் 8க்கு செல்ல இவருக்கு அழைப்பு வந்துள்ளதாம்.

எதிர்பார்க்கும் மக்கள்

இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகளாக நடித்து கலக்கியுள்ள நிலையில், அவர் முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமயத்தில் அந்த வீட்டிற்குள் செல்ல உள்ளார். இங்கும் அவர் அப்பாவை மிரட்டி ஆளும் மகளாக இருப்பாரா அல்லது, மற்றவர்களால் மிரட்டப்படுவாரா எனத் தெரியவில்லை. இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகளாக அறிமுகமாகி, அவரது நிகழ்ச்சிக்குள் இன்று செல்ல உள்ளதால், இவர் என்ன செய்ய போகிறார் என்பதைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Whats_app_banner