Bigg Boss Winner: அனல் பறக்கும் ஓட்டிங்… பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்?
Jan 22, 2023, 11:03 AM IST
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தற்போது நடைபெற்று வரும் ஆறாவது சீசனின் இறுதி நாள் இன்று ( ஜனவரி 22) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் 21 நபர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் 17 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் மிட் நைட் எவிக்ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார்.
இதனால் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த மூன்று பேரில் யார் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிந்து கொள்ள அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இறுதி நாள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஓட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தில் சின்னத்திரை பிரபலத்தில் ஒருவர், மாடலிங் துறையில் ஒருவர், அரசியலில் ஒருவர் என மூன்று துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசனின் வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மக்களிடம் அதிகமான வாக்குகள் பெற்று அசீம் தான் டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்வார் என சொல்லப்படுகிறது.
அனல் பறக்கும் ஓட்டிங்கில் அசீம் தான் ஷிவின் மற்றும் விக்ரமனை வீட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறார். அதனால் அவர் வெற்றி பெற தான் வாய்ப்பு அதிகம் என சமூக வலைதளங்ளில் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மேடையில் அசீமை, கமல் ஹாசன் வெற்றியாளராக அறிவிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என பலரும் கலாய்த்தும் வருகி
எப்போதும் எந்த ஒரு போட்டி என்றாலும் அதை சுமுகமாக அசீம் முடித்தது இல்லை. சண்டை சச்சரவு எங்காவது நடந்தால் அதில் அவரின் கை எப்போதும் ஓங்கி இருக்கும். அதனால் இவர் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வென்றார் என்றால், அது தப்பான எடுத்துக்காட்டாக மாறிவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்