தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினியா இல்ல விஜய்யா.. 2024 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? டாப் 5 படங்கள் என்னென்ன?

ரஜினியா இல்ல விஜய்யா.. 2024 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? டாப் 5 படங்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil

Dec 10, 2024, 02:31 PM IST

google News
2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்ன என்ற பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்ன என்ற பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்ன என்ற பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில்,கோலிவுட் திரையுலகில் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பலமாக இருந்த படங்கள் எது? பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனவர் யார்? என்ற விஷயங்கள் வைரலாகி வருகின்றன.

2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்ன என்ற பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் சாதனை படைத்தது. ஆனால், இந்த ஆண்டு ஒரு படம் கூட ரூ.500 கோடியை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விஜய் நடித்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தனர். இந்த படம் செப்டம்பரில் விநாயக சதுர்த்தி அன்று வெளியானது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் படத்தை தயாரித்துள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்தது.

அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடித்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. 

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட அமரன் படம் தீபாவளியன்று வெளியானது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூல் செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திரையரங்கை தொடர்ந்து ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் லால் சலாம் மற்றும் வேட்டையன். லால் சலாம் பெரிய தோல்வியை சந்தித்தாலும், இந்த வருடம் வேட்டையன் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இப்படம் அக்டோபர் மாதம் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ஞானவேல் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடி வசூல் செய்தது.

ராயன்

2024 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் படம் வெளியானது. இந்தப் படத்தை அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம், தனுஷின் 50 ஆவது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.160 கோடி வசூல் செய்து இருக்கிறது.

மகாராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான, மகாராஜா ஜூன் மாதம் வெளியானது. நிதின் இயக்கிய இப்படம் ரூ. 163 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று உள்ளது. இப்போது சீனாவில் 40 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி அங்கேயும் வசூல் செய்து உள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவானது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி