தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன்

சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன்

Dec 15, 2024, 01:59 PM IST

google News
சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன் - வைரல் வீடியோ
சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன் - வைரல் வீடியோ

சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன் - வைரல் வீடியோ

நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகா ரெட்டி ஆகியோர் அவரது வீட்டில் சென்று சந்தித்திருக்கிறார்.

ஜாமீனில் வெளியே வந்தார்.

'புஷ்பா 2' கூட்ட நெரிசலில் பெண் உயிர் இழந்த விவகாரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலுக்கு சென்ற அவர் அடுத்த நாள் காலை ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அந்த வகையில் சிரஞ்சீவியின் மனைவியான சுரேகாவும் ஜூப்ளி மலையில் இருக்கும் அல்லு அர்ஜுனின் வீட்டிற்கு நேராக சென்று தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார்.

அப்போது சுரேகா எமோஷனல் ஆனார். உடனே அல்லு அர்ஜூன் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

புஷ்பா 2 தி ரூல் முதல் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர் அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன். தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். ஆனாலும் அவர் நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

நடந்தது என்ன?:

உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.

அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்து சிறுவனை மீட்டனர்.

அல்லு அர்ஜுன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்:

அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனை டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு:

அல்லு அர்ஜுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் பிரிவுகள் 105, 118 (1) மற்றும் 3 (1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக அவரை கைது செய்வதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்தனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன்:

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டின் முதல் மாடியில் உள்ள அல்லு அர்ஜுனை நெருங்கிய அதிரடிப் படையினர், ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் அவரை கைது செய்வதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

படுக்கை அறையில் இருந்த அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்திருந்த அல்லு அர்ஜூனை லிப்டில் இருந்து கீழே இறங்கிய போலீஸார், பின்னர் அவரது ஆடைகளை மாற்ற பணித்தனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அல்லு அர்ஜுனின் தந்தை அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

மேலும், சந்தியா தியேட்டரில் நடந்த இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர். அதன்பின், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது தந்தையும் போலீஸ் வாகனத்தில்சென்றனர்.

அல்லு அர்ஜுன் சார்பில் மனுதாக்கல்:

இதனைத் தொடர்ந்து, சந்தியா திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்ற வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு டிசம்பர் 13ஆம் தேதியான இன்று அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதுகூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர் தரப்பு கூறியது:

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவின்போது, நடிகர் அல்லு அர்ஜுன் சினிமா தியேட்டருக்கு வருவதாக தியேட்டர் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. ஆனால், பார்வையாளர்களின் அவசரத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தியேட்டர் தரப்புக்கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தியேட்டரின் பார்ட்னர்கள், மேலாளர் மற்றும் ஊழியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி