தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாயகன் மீண்டும் வரார்… விக்ரம் ஓடிடி ரிலீஸ் எப்போது

நாயகன் மீண்டும் வரார்… விக்ரம் ஓடிடி ரிலீஸ் எப்போது

Aarthi V HT Tamil

Jun 29, 2022, 02:59 PM IST

google News
விக்ரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விக்ரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விக்ரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த மூன்றாம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே தியேட்டர்களில் திரும்ப திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் இனிமேல் ஓடிடி தளத்திலும் அதிக எண்ணிக்கையில் பார்த்து ரசிக்க உள்ளனர்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் விக்ரம் படம் ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக கமல் ஹாசன் துப்பாக்கிகளுடன் தோன்றும் புரொமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

உலக அளவில் விக்ரம் படம் சுமார் ரூ. 400 கோடி வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் ஓடிடி உரிமை மட்டும் சுமார் 98 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் சொல்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இதில் பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் நாட்டில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி