'கேப்டன்' விஜயகாந்தின் முதல் வெற்றி...42 ஆண்டுகளை நிறைவு செய்த 'சட்டம் ஒரு இருட்டறை'!
Feb 14, 2024, 07:11 AM IST
42 years of Sattam Oru Iruttarai: விஜயகாந்த் எனும் நடிகரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கி 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் வெளியாகி இன்றோடு 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுத்து தனக்கென தனி ரூட்டை அமைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
கருப்பு தேகம், சிவந்த கண்களுடன் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த விஜயகாந்த். 1979-ல் அறிமுகமான போது ஓரிரு படங்களில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. எப்படியும் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடித்த விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம். விஜயகாந்த் எனும் நடிகரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தில் விஜயகாந்த் விஜய் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பூர்ணிமா தேவி, வசுவதி, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தின் கதை ஷோபா சந்திரசேகர். எஸ்.ஏ.சி படத்தை இயக்கி இருந்தார். அதுமட்டுமா? விஜயகாந்துக்கு ஆரம்பக் காலங்களில் டப்பிங் குரல்தான் கொடுக்கப்பட்டது. 'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலும் விஜயகாந்த் பேசியிருக்கமாட்டார். அவருக்கு டப்பிங் கொடுக்கப்பட்டது. விஜயகாந்துக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தளபதி விஜய்யின் தாய்மாமாவான பிரபல பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.
பெரிய தொழிலதிபரை 3 கெட்டவர்கள் சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். அதைப் பார்த்துவிட்ட ஒருவர், சாட்சி சொல்கிறார். அதனால் மூவருக்கும் 12 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கிறது. ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் மூன்று பேரும் ஜெயிலில் இருந்து வந்து சாட்சி சொன்னவரைக் கொல்கிறார்கள். அவரின் மூத்த மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்படுகிறாள். இதையெல்லாம் பார்த்த சிறுவன், வளர்ந்து பெரியவனாகி சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி கொல்கிறான் என்பது தான் கதை. படத்தின் கதை தமிழ் சினிமாவின் பழசுதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் எல்லா சென்டர்களிலும் வெற்றி பெற்றது. அதைத்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் நுணுக்கமாக கையாண்டிப்பார்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்த 'சட்டம் ஒரு இருட்டறை' 1981 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ல் திரையரங்குகளில் ரலீஸானது. தமிழகம் முழுவதும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளி வந்து இன்றோடு 26 ஆண்டுகளை கடந்திருக்கிறது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 42 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் விஜயகாந்தின் நடிப்பில் இந்தப்படமும் ஒரு மைல்கல்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் விஜயகாந்துக்கும் வெற்றிக்கனியை வழங்கியதில், முதல் படம் முழுமையான படம் என்கிற பெருமையைப் பெறுகிறது சட்டம் ஒரு இருட்டறை. இந்தநாளில் கேப்டனின் புகழை நினைத்து பார்ப்போம். அவரின் திரைவாழ்க்கையில் முதல் வெற்றிப்படமாக அமைந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’யை நினைவுகூர்வோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்