தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Vs Rajini: விஜய் அரசியலுக்கு வருவதில் ரஜினிக்கு பொறாமையா?

Vijay Vs Rajini: விஜய் அரசியலுக்கு வருவதில் ரஜினிக்கு பொறாமையா?

Feb 07, 2024, 10:18 AM IST

google News
நம்மால் பண்ண முடியாத இந்த விஷயத்தை ஒருத்தன் பண்றானேன்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி எல்லாத்தையும் கடந்தவர் அவர் ஒரு மகாத்மா என்றெல்லாம் யார் சொன்னாலும் உள்ளுக்குள் கண்டிப்பாக ஒரு பொறாமை இருக்கும். அதனால் ரஜினியெல்லாம் சத்தியமாக விஜய்க்கு எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்
நம்மால் பண்ண முடியாத இந்த விஷயத்தை ஒருத்தன் பண்றானேன்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி எல்லாத்தையும் கடந்தவர் அவர் ஒரு மகாத்மா என்றெல்லாம் யார் சொன்னாலும் உள்ளுக்குள் கண்டிப்பாக ஒரு பொறாமை இருக்கும். அதனால் ரஜினியெல்லாம் சத்தியமாக விஜய்க்கு எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்

நம்மால் பண்ண முடியாத இந்த விஷயத்தை ஒருத்தன் பண்றானேன்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி எல்லாத்தையும் கடந்தவர் அவர் ஒரு மகாத்மா என்றெல்லாம் யார் சொன்னாலும் உள்ளுக்குள் கண்டிப்பாக ஒரு பொறாமை இருக்கும். அதனால் ரஜினியெல்லாம் சத்தியமாக விஜய்க்கு எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்திருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் ரஜினி விஜய்க்கு ஆதரவு தருவாரா என்பது குறித்து விமர்சகர் அந்தணன் டேக் ஒன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி கடந்த 2ம் தேதி வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய்க்கு ரஜினி காந்த் ஆதரவு கொடுப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

சினிமா மாதிரி பாலிட்டிக்ஸ் கிடையாது என்பது உண்மைதான். அது வேறு களம். ஆனால் இன்று விஜய்க்கு உள்ள செல்வாக்கு அவருக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து ஒரு பெரிய கட்டமைப்பு உருவாக்கி வைத்துள்ளார். இனிமேல் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல கட்டமைப்பை அவரிடம் உள்ளது. அங்காங்கே மாவட்ட செயலாளர்களை போட்டு அவர்களும் சின்சியராக வேலை பார்த்து வருகின்றனர்.

ஆனால் விஜயகாந்த் மாதிரி ஒரு அனுபவம் இல்லை. விஜய்யையும் விஜயகாந்தையும் ஒப்பிடும் போது விஜய்க்கு பெரிய அனுபவம் கிடையாது. விஜயகாந்த் பல இடங்களில் அவரே இறங்கி பஞ்சாயத்துகளை பண்ணுவார். ஈழத்தமிழர் பிரச்சனைனா அவரே ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி உண்ணாவிரதம் இருப்பது. போராட்டம் பண்ணுவது என செய்வார். 

நிறைய அரசியல் இல்லாத களத்தில் விஜயகாந்த் நான் யார் என்பதை நிரூபித்து உள்ளார். அதனால் அவர் பாலிட்டிக்ஸ் வரும் போது ரெம்ப ஈசியாக அவருக்கு இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவருக்கே டப் கொடுத்துட்டாங்க. அரசியல் தந்திரங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கும். நீங்கள் நம்பவே முடியாது நமக்காக உயிரை கொடுத்துருவான் என்று நீங்கள் நினைச்சுட்டு ஒருத்தன கிட்ட சேர்த்தால் உயிரை எடுக்குறவனா இருப்பான் அவன். அப்படி உள்ள சூழலில் இவர் என்ன பண்ண போகிறார் என்பது தெரியவில்லை, என்றார்.

எல்லாவற்றையும் தாண்டி இன்றைய அரசியல் பணபலம் மிக்கவர்களின் கைகளில் இருக்கிறது. 5000 கொடுத்தால் தான் ஓட்டு என்ற நிலைக்கு மக்கள் வந்துட்டாங்க. எல்லாத்தையும் தாண்டி அரசியல் களம் பலவீனமாக இருந்தா நீங்க ஈசியா வந்திடலாம். ஆனால் பலமாக இருக்கும் போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். அந்த பலத்தை பலவீனமாக்க நீங்க என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வி உள்ளது என்றார்.

மேலும் விஜய்க்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு, ஒரு காலத்திலும் ரஜினி விஜய்க்கு ஆதரவு தர மாட்டார். உள்ளுக்குள் பொறாமையாய் பொங்கி வெடிப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. 

நம்மால் பண்ண முடியாத இந்த விஷயத்தை ஒருத்தன் பண்றானேன்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி எல்லாத்தையும் கடந்தவர் அவர் ஒரு மகாத்மா என்றெல்லாம் யார் சொன்னாலும் உள்ளுக்குள் கண்டிப்பாக ஒரு பொறாமை இருக்கும். அதனால் ரஜினியெல்லாம் சத்தியமாக விஜய்க்கு எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்பது போன்ற பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அறித்த நடிகர் ரஜினிகாந்த், "அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்

நன்றி : TAKE 1

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி